2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  ரமளான் மாதத்தின் சிறப்பு

  1 வது மஜ்லிஸ் - ரமளான் மாதத்தின் சிறப்பு
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் படைத்தவன். நீரையும் நிலத்தையும் படைத்தான். ஒவ்வொன்றையும் படைத்து அழகாய் வடிவமைத்தான். இரவின் இருளில் ஊர்ந்து செல்லும் சிற்றெரும்புகூட அவனது பார்வையை விட்டும் தப்பாது. வானத்திலும் சரி பூமிலும் சரி அணுஅளவு பொருள்கூட அவனது அறிவுஞானத்தை விட்டும் மறைந்திடாது. மண்ணி லும் விண்ணிலும் உள்ள அனைத்திற்கும் மண்ணுக்கடியில் உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன்.
  உங்கள் சொற்களை நீங்கள் உரக்கக் கூறினால் (தான் அல்லாஹ் கேட்பான் என்பதில்லை) திண்ணமாக அவன் ரகசி யத்தையும் பரம ரகசியத்தையும் அறிகிறான். வணக்கத்திற் குரிய இறைவனைத் தவிர வேறில்லை. அழகிய திருநாமங்கள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம்!
  அவனே ஆதம் நபியைப் படைத்தான். அவர்களைச் சோத னைக்கு உள்ளாக்கினான். பிறகு அவர்களை நபியாகத் தேர்வு செய்து கொண்டான். அவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்று அவர்கள் மீது கருணை பொழிந்து நேர்வழி காட்டினான். அவனே நூஹை நபியாக அனுப்பினான். அவர்கள் கப்பல் செய்தார்கள்., அல்லாஹ்வின் கட்டளையுடன் அது சென்றது. அவனே இப்றாஹீம் நபியை நெருப்பில் இருந்து காப்பாற்றினான். அதன் வெப்பம் அவர்களுக்குக் குளுமையாக வும் சாந்தமாகவும் மாறியது! சகோதரர்களே! நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்;து பாடம் பெறுங்கள்.
  அவனே மூஸா நபிக்கு ஒன்பது சான்றுகளை வழங்கினான். ஆனாலும் ஃபிர்அவ்ன் படிப்பினை பெறவில்லை. பாவச்செயல் களில் இருந்து விலகவில்லை! மனிதர்களையெல்லாம் திகைக் செய்யும் சான்றுகளைக் கொடுத்து அவனே ஈஸா நபிக்கு உதவினான். அவனே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது-தெளிவான அறிவுரைகளும் நேர்வழியும் உடைய வேதத்தை இறக்கியருளினான்.
  அல்லாஹ்வைப் புகழ்கிறேன்;;. தொடர்ச்சியாகப் பொழிந்து கொண்டிருக்கும் அவனுடைய அருட்கொடைகளின் பேர்pல் புகழ்;கிறேன்! மேலும் தலைநகர் மக்காவில் இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மத் நபி மீது ஸலாத்தும் ஸலாமும் கூறுகிறேன்.
  நபியவர்களின் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அவர்களின் (ஹிரா) குகைத்தோழரான அபூபக்ர் மீதும் -அல்லாஹ்வின் ஒளியைக் கொண்டு பார்ப்பவராகவும் உள் ளுதிப்பால் சீரான கருத்துகள் வழங்கு பவராகவும் திகழ்ந்த உமர் மீதும் - நபியவர்களின் இரு புதல்விகளை (ஒருவர் இறந்த பின் மற்றொருவராய்) திருமணம் புரிந்த உஸ்மான் மீதும் - அறிவுக் கடலாகவும் குகையினுள் சிங்கமாகவும் விளங் கிய அவர்களின் பெர்pய தந்தை மகன் அலீ மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக!
  நபியவர்களின் குடும்பத்தினர்- பார் புகழ் பெற்ற அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  என் அன்புச் சகோதரர்களே! சிறப்புமிக்கதொரு மாதம் நம் மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம். இம் மாதத்தில் அல்லாஹ் பெரும்அளவு கூலிகளை வழங்குகிறான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களைத் திறந்து விடுகிறான்.
  இது நன்மைகள் மற்றும் அருட்பேறுகளின் மாதம். வேகு மதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்.
  ‘ரமளான் (நோன்பு) மாதம் எத்தகையதெனில் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது’
  இறையருளும் பாவமன்னிப்பும் நரகத்தி;லிருந்து விடுதலை யும் சூழ்ந்திருக்கும் மாதம்! ஆம்! இம்மாதத்தின் ஆரம்பம் அருளாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பாகவும் இறுதிப் பகுதி, நரகில் இருந்து விடுதலையாகவும் உள்ளது. இம்மாதத்தின் சிறப்பு குறித்து பிரபலமான நபிமொழிகளும் நம்பகமான அறி விப்புகளும் வந்துள்ளன. அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
  ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்;தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது” (நூல்: புகாரி, முஸ்லிம்)
  இம்மாதத்தில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுவது - நல்ல அமல்கள் பெருகுவதற்காகவும் அமல் செய்கிறவர்களுக்கு ஆர்வ மூட்டுவதற்காகவும்தான்! இதேபோன்று நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுவது - இறைநம்பிக்கையாளர்களின் பாவங்கள் குறைவதற்காகத்தான்!
  ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப் படுகின்றனர். ஆதலால் வேறுமாதங்களில் தீமை செய்யுமாறு மனிதர்களைத் தூண்டுவதுபோல் இம்மாதத்தில் அவர்களால் தூண்டுவதற்கு முடியாது!
  மேலும் அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  எனது சமுதாயத்திற்கு ரமளான் மாதத்தில் ஐந்து சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பு வாழ்ந்த எந்தச் சமு தாயத்திற்கும் இவை கொடுக்கப்படவில்லை. நோன்பு நோற்பவரின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியைவிட அதிக மணம் கமழுவதாக உள்ளது.
  மேலும் மலக்குகள் நோன்பாளிகளுக்காக -அவர்கள் நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்புக் கோருகிறார்கள். மேலும் தினமும் அல்லாஹ் தனது சுவனத்தை அலங்கரிக்கிறான். மேலும் கூறுகிறான்:
  எனது சுவனமே! என் நல்லடியார்கள் தங்களுடைய சிரமத்தையும் துன்பத்தையும் களைந்துவிட்டு உன்னிடம் வந்து சேரந்திட- இதோ! நெருங்கி விட்டார்கள்! ”மேலும் மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தான்கள் இந்த மாதத்தில் விலங்கிடப்படுகிறார்கள். ரளாலான் அல்லாத மாதத்தில் தீமைகள் செய்யத் தூண்டுவதுபோல் ரமளானில் அவர்களால் முடியாது. மேலும் இந்த மாதத்தின் கடைசி இரவில் அவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான் - அப்போது கேட்கப்பட்டது: அல்லாஹ்வின் தூதரே! அது லைலதுல் கத்ர் இரவா? என்று! நபி (ஸல்) அவர்கள், - இல்லை., பணி செய்தவருக்குக் கூலி வழங்கப்படுவது அவர் தன் பணியைச் செய்து முடிக்கும்போது தானே! என்றார்கள்” (நூல்: அஹ்மத், பஸ்ஸார்) (இதனை பஸ்ஸார், பைஹகியும் அறிவித்துள்ளார். அபுஸ் ஷைக் அவர்கள் இதனை நன்மை எனும் பகுதியில் அறிவித்துள்ளார். இதன் அறிவிப்புத் தொடர் மிகவும் பலவீனமாகும். ஆயினும் இதில் சிலவற்றிற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்புச் சான்றுகள் உள்ளன.)
  என் அன்புச் சகோதரர்களே! இந்த ஐந்து சிறப்பு அம்சங்களையும் அல்லாஹ் உங்களுக்காகவே தயார் செய்து வைத்துள் ளான்,. ஏனைய சமுதாயங்களுக்கு மத்தியில் இவற்றை உங்களுக்கு மட்டும் வழங்கியுள்ளான்! இவற்றின் மூலம் தன் அருட்கொடைகளை உங்கள் மீது நிறைவாக்குவதே அவனது நோக்கமாகும்.
  ஆக! அல்லாஹ் உங்கள் மீது எத்தனை எத்தனை அருட் கொடைகளைப் பொழிந்துள்ளான். எவ்வளவு சிறப்புகளை வழங்கியுள்ளான்! சிந்தித்தீர்களா?
  மனி இனத்தி(னைச் சீர்படுத்துவத)ற்காகத் தோற்று விக்கப் பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கி றீர்கள். நீங்கள் நன்மை செய்யும்படி ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் தடுக்கிறீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிPர்கள்!”
  முதல் சிறப்பு நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி வாசனையைவிட மணம் நிறைந் தது என்பதாகும்! இந்த நபிமொழியில் கலூஃப் எனும் சொல்லின் பொருள், சிறுகுடல் இரைப்பை - உணவின்றி காலியாக இருக்கும்போது வாயின் இயல்பான வாடை வித்தி யாசப்படுதல் என்பதாகும்.
  இது மனிதர்களிடத்தில் வெறுக்கப்படுகிற ஒன்றுதான். ஆயினும் அல்லாஹ்விடத்தில் இது கஸ்தூரி (இதனை இமாம் புகாரியும் முஸ்லிமும் - இந்தச் சமுதாயத்திற்குச் சொந்த மாக்குதல் எனும் வாசகமின்றி அறிவித்துள்ளார்கள்.) வாசனையைவிட மணம் நிறைந்ததாகும். ஏனெனில் இது, அல்லாஹ்வை வழி படுவதாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்ததாலும் ஏற்பபட்ட மாறுதலாகும். அல்லாஹ்வை வழிபடுவதால் ஏற்படும் (மாறுதல்) ஒவ்வொன்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமானதே! அவற்றை மேற்கொள்ளும் மனிதனுக்கு மிக உன்னதமான - சிறப்புமிக்க கூலி அல்லாஹ் வழங்குகிறான்.
  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படும் உயிர்த் தியா கியை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வின் மார்க்கம்; மேலோங்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்! அந்தத் தியாகி மறுமை நாளில் வருவார்., அவரது காயத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கும். அதன் நிறம் இரத்தத்தின் நிறமாக இருந்தாலும் மணம் கஸ்தூரியை விட வாசனையாக இருக்கும்!
  ஹஜ் பற்றி வருகிறது: அரஃபா மைதானத்தில் தங்கி யிருப் பவர்கள் பற்றி மலக்குகளிடம் அல்லாஹ் இவ்வாறு பெருமைப் படக் கூறுவான்:-பாருங்கள்! என்னுடைய இந்த அடியார்களை! இவர்கள் தலைவிரி கோலமாகவும் புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளார்கள் என்று!(அஹ்மது, இப்னு ஹிப்பான்) (வேறு அறிவிப்புச் சான்றுகளின் மூலம் ஸஹீஹ் தரத்திலானது.)
  தலைவிரிகோலம் - இந்த இடத்தில் அல்லாஹ்வுக்குப் பிரிய மாக இருப்பதற்குக் காரணம், அது அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்ததால் ஏற்பட்டது என்பதேயாகும். இஹ்ராமினால் தடை செய்யப்பட்டவற்றை விட்டு விலகியதாலும் இயல்பான சுக வாழ்வை விட்டதாலும் ஏற்பட்டதாகும்.
  இரண்டாவது சிறப்பு மலக்குகள் நோன்பாளிகளுக்காக - நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்பு கோரிக்கொண்டிருக்கி றார்கள் என்பதாகும். மலக்குகள் அல்லாஹ்விடத்தில் மரியா தைக்குரிய அடியார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்ற மாகச் செயல்படி மாட்டார்கள். தங்களுக்கு இடப்படும் பணி களைச் செய்துகொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட மலக்கு கள் நோன்பாளிகளுக்காகச் செய்யும்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அவ்வாறு அவர்களின் பிரார்த்தனை (இறைவனால்) ஏற்கத்தகுதி பெற்றிருப்பதற்குக் காரணம் - அப்படிப் பிரார்த்தனைசெய்ய அவர்களை அல்லாஹ் அனுமதித் தான் என்பதே!
  நோன்பு நோற்கிற இந்தச் சமுதாய மக்களுக்காகப் பாவ மன்னிப்பு கோரிட அல்லாஹ், மலக்குகளுக்கு அனுமதி கொடுத்ததன் நோக்கம், நோன்பாளிகளின் அந்தஸ்தைப் பிரகட னப்படுத்துவதும் அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்ற நோன்பின் சிறப்பை விளக்குவதுமே ஆகும்.
  அல்-இஸ்திஃபார் என்றால் பாவமன்னிப்புக் கோருதல் என்று பொருள்.பாவமன்னிப்புக் கோருதல் என்றால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் பாவங்களை மறைப்பதும் பொறுப்பதுமாகும்.. இவ்வாறு பாவமன்னிப்புக் கோருவது கோரிக்கைகளிலேயே மிகவும் உயர்வானது! மனிதர்கள் அனைவரும் தவறிழைப்ப வர்களாய் - வரம்பு மீறி நடப்பவர்களாய் - தங்களுக்குத் தாங் களே அநீதி புரிபவர்களாய் பிறகு இறைவனது மன்னிப்பின் பால் புகலிடம் தேடியே ஆக வேண்டியவர்களாய் இருக்கி றார்கள்!
  மூன்றாவது சிறப்பு அல்லாஹ் ஒவ்வோரு நாளும் சுவ னத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறான், மேலும் கூறுகிறான்: (சுவனமே,) என் நல்லடியார்கள் கஷ்டத்தையும் சிரமத் தையும் பொருட்படுத்தாமல் உன் பக்கம் வருவதற்கு மிகவும் நெருங்கி வி;ட்டார்கள்” - ஒவ்வொரு நாளும் அல்லாஹ் சுவ னத்தை அலங்கரிப்பதன் நோக்கம், அவனுடைய நல்லடியார் களை உற்சாகப்படுத்துவதும் சுவனம் புகுவதில் அவர்களுக்கு ஆர்வம் ஊட்டுவதுமாகும்.
  கஷ்டத்தையும் நோவையும் தங்களை விட்டும் தூரப்படுத்து வது....என்றால் உலகத்தின் கஷ்டத்தையும் அதன் களைப்பை யும் பொருட்படுத்தாமல் அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நல்லமல்களில் அவர்கள் முனைப்புடன் ஈடுபடுவதாகும். அந்த நல்ல அமல்களில்தான் அவர்களின் இம்மை - மறுமைக்கான நற்பேறுகள் அடங்கியுள்ளன என்பதுமாகும். சாந்தியும் கண் ணியமும் உள்ள சுவனத்தில் அவர்கள் பிரவேசிப்பதும் அந்த நல்லமல்களைப் பொறுத்தே அமையும்.
  நான்காவது சிறப்பு மூர்க்கத்தனமான ஷைத்தான்கள் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் பிணைக்கப்படுகிறார்கள். (இதனை புகாரி அறிவித்துள்ளார்கள். ஸஹீஹ் முஸ்லிமில்-ஷைத்தான்கன் விலங்கிடப்படுகிறார்கள் என உள்ளது. இப்னு ஹ{ஸைமாவில் - ஜின்களில் மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தான்கள் என உள்ளது. நஸாயியில் - மூர்க்கத் தனம் கொண்ட ஷைத்தான்கள் என உள்ளது. இவை யாவும் அபூ ஹ{ரைரா (ரலி) அவர்களின் அறிவிப்புதான்! இந்தச் சமுதாயத்திற்குச் சொந்த மாக்குதல் எனும் வாசகமின்றி!) ஆதலால் அவர்களின் விருப்பப்படி நல்லடியார்களைச் சத்தியத் தில் இருந்து வழிகெடுக்கவோ நல்லவை செய்யவிடாமல் அவர்களைத் தாமிதப்படுத்தவோ ஷைத்தான்களால் முடியாது. இது நல்லடியார்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியாகும். அவர்களின் விரோதியை விட்டும் அவர்களைத் தடுத்து விட் டான். அவன் எப்படிப்பட்ட விரோதி எனில், தன் கட்சக்காரர் களை நரகில் சேர்ப்பதற்காக அழைக்கக் கூடிய விரோதி!
  அல்லாஹ் செய்யும் இந்த நல்லுதவியால்தான் ஏனைய நாட் களைவிட அதிகமாக இம்மாத்தில் நல்லமல்கள் செய்வதிலும் தீமை களைவிட்டு விலகுவதிலும் நல்லோர்கள்; அதிக ஆர்வம் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்கள்.
  ஐந்தாவது சிறப்பு இம்மாத்தின் கடைசி இரவில் (இதேபோன்று பைஹகியும் ஜாபிர்(ரலி) அவர்களிள் ஹதீஸை அறிவித் துள்ளார்கள். முன்திரி சொல்கிறார்கள்: இதன் அறிவிப்புத் தொடர் அசலில் உள்ள அபூ ஹ{ரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பைவிடவும் ஏற்றமானது., நெருக்கமானது!) முஹம்மத் நபியவர்களின் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங் குகிறான் என்பதாகும். இது நோன்பையும் தொழுகை யையும் அவர்கள் முறையாக நிறைவேற்றியிருக்கும் பட்சட்த்தில்தான்! அமல் செய்து முடித்தவுடன் அதற்கான கூலியை இந்தச் சமு தாயத்திற்கு அல்லாஹ்; நிறைவாக வழங்குவதென்பது அல் லாஹ்வின் பெரும் அருட்கொடையாகும். அமல் செய்தவருக்கு - அதனைச் செய்து முடித்தவுடன் முழுமையாகக் கூலி வழங்கு வதுதானே நியாயம்.அல்லாஹ் தன் அடியார்களக்கு இத்தகைய கூலியை வழங்கிச் சிறப்பித்திருப்பது மூன்று வகைகளில் ஆகும்.
  ஒன்று: பாவமன்னிப்புக்கும் அந்தஸ்துகளின் உயர்வுக்கும் காரணமாகத் திகழும் நல்லமல்களை இறைமார்க்கத்தின் நடை முறைகளாய் தன் அடியார்களுக்கு அல்லாஹ் வகுத்துத் தந்துள் ளான். இந்த நல்லமல்களைச் செய்வதற்கு இறைமார்க்கத்தில் அனுமதி இல்லையெனில் இவற்றின் மூலமாக அல்லாஹ்வை - நல்லடியார்கள் வழிபட்டிருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ், தன்னுடைய தூதர்களுக்கு அனுப்பும் வஹி எனும் இறையருட் செய்தியின் மூலமாக மட்டுமே வழிபாட்டு நெறி முறைகளைப் பெறமுடியும்.
  இதனால்தான் இறைமார்க்கத்தின் நடைமுறைகளை -இறை வனது வழிகாட்டலின்றி சுயமாக வகுக்கக்கூடிய மனிதர்களைக் குறித்து அல்லாஹ் மறுத்துரைக்கின்றான்.அப்படி மார்க்க நடை முறைகளைச் சுயமாக ஏற்படுத்துவது ஷிர்க் (இறைவனுக்கு இணைக்கடவுளை ஏற்படுத்துதல்) எனும்; பாவத்தின் ஒருவகை யாகும் எனக்கூறுகிறான்:
  அல்லாஹ் அனுமதி அளிக்காதவற்றை-(தீனின்) இறைமார்க்கத்தின் நெறிமுறைகள் என அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கும் இணைக் கடவுளர்கள் அவர்களுக்கு உண்டா?” (42: 21)
  இரண்டு: நல்ல அமல்கள் புரிவதற்கான உதவியை - பெரும்பாலான மக்களோ அந்த நல்லமல்களைக் கைவிட்டு விட்ட நிலையில் - அல்லாஹ் நல்லடியார்களுக்கு அளித்துள் ளான். அல்லாஹ், அவர்களுக்கு நல்லுதவியும் அருளும் புரிந்திருக்காவிடில் இந்த அமல்களை அவர்களால் செயல் படுத்தியிருக்க முடியாது! எனவே இவ்வுதவியை நல்கிய அல்லாஹ் வுக்கே சிறப்பனைத்தும்! அல்லாஹ் கூறுகிறான் : -
  அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் (நபியே) நீர் கூறும்: நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! உண்மையாதெனில், நம்பிக்கைகொள்வதற்கான வழிகாட்டலை உங்களுக்கு அருளியதன் மூலம் அல்லாஹ்தான் உங்களுக்குப் பேருதவி செய்துள்ளான். (நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில்) நீங்கள் வாய்மையாளர்களாக இருந்தால்! (49 :17)
  மூன்று: அல்லாஹ் ஏராளமான கூலியைத் தாராளமாக வழங்கியிருப்பதாகும்;. ஒரு நன்மைக்குப் பத்து நன்மைகள் எனும் வகையில் - எழுநூறு வரையில் ஏன், அதைவிட பன்மடங்கு இரட்டிப்புக் கூலி வழங்குகி;றான்! அல்லாஹ் நம்மை நல்லமல்கள் புரியவைத்து கூலியும் வழங்குகிறான் எனில் அந்தச் சிறப்பு அல்லாஹ்வையே சாரும். அகிலம்; முழுதும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
  அன்புச் சகோதரர்களே! ரமளான் மாதம் வந்திருப்பது பெரும் அருட்கொடை என்பது யாருக்கு? யார் அந்த மாதத்தை அடைந்து அதில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி னார்களோ அவர்களுக்குத்தான்! இறைவனுக்கு மாறுசெய்வ தில் இருந்து விலகி அவனுக்கு வழிபடுவதும் அவனை மறந்துவிடாமல் நினைவு கூர்வதும் அவனை விட்டுத் தூரமா காமல் அவன் பக்கம் திரும்பிச் செல்வதும்தான் ரமலான் மாதத் துக்குச் செய்யும் கடமையாகும்.
  ரஜபில் செய்த பாவம் போதாதென்று
  ஷஅபானிலும் இறைக் கட்டளையை
  மீறியவனே! - இப்போது இந்த
  ரமளானையும் பாவத்திற்குரிய மாதமாய்
  நீ ஆக்கப் பார்க்கிறாயா? வேண்டாம்!
  நன்முயற்சியுடன் ஓதிடு குர்ஆனை,
  துதி பாடிடு உன்னிறையோனை! - இது
  துதிபாடும் மாதம், மறையோதும் காலம்!
  சான்றோர் பலரும் நோன்பு நோற்ற
  ஆன்றோர் பலரும் உன் உற்றார் உறவினராக
  அண்டை வீட்டாராக அன்பு உடன் பிறப்புகளாக
  வாழ்ந்ததை நீ அறிவாயே!
  மரணம் அவர்களை விட்டுவைத்ததா? என்ன?
  அவர்களுக்குப் பிறகு நீ உயிர் வாழ்கிறாய்,
  உன்னை மரணம் விட்டுவைத்திருக்கிறது!
  என்ன தூரம்? நேற்று வாழ்ந்த அவர்களுக்கும்,
  இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கும்?
  யா அல்லாஹ்! மறதி எனும் நித்திரையில் இருந்து எங் களை விழித்தெழச் செய்வாயாக! (மரணம் எனும்) பயணத் திற்கு முன்பே இறையச்சம் எனும் கட்டமுது பெற எங்களுக்கு அருள்புரிவாயாக! அவசரப்படாமல் -கிடைத்த நேரத்தை அரிதா கக் கருதிச்செயல்பட எங்களுக்கு அருள் புரிவாயாக! கருணை யாளர்களில் எல்லாம் கருணையாளனே! உனது கருணை கொண்டு - எங்களையும் எங்கள் பெற்றோரையும் எல்லா முஸ்லிம்களையும் மன்னித்தருள்வாயாக!


  2-வது மஜ்லிஸ் - நோன்பின் சிறப்பு!
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நுட்பமானவனும் பரிவு மிக்கவனும் பேருபகாரியும் அவனே! தன்னிறைவுடையவனும் ஆற்றல்மிக்க அரசனும் மென்மையான இயல்புடையவனும் அளவிலாக் கருணையும் நிகரிலாக் கிருபையும் உடையவனும் அவனே! ஆதியும் அவனே - அவனுக்;கு முன்பு எதுவுமில்லை! அந்தமும் அவனே - எல்லாம் அழிந்த பின்பு அவன் மட்டுமே எஞ்சியிருப்பான்! அவனே வெளிரங்கமானவன்-எதுவும் அவனை மிகைத்ததல்ல! அவனே அந்தரங்கமானவன் - அவனுக்கு அப்பால் எதுவும் அந்தரங்கமானதல்ல!
  நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை அனைத்தையும் தனது அறிவு ஞானத்தால் சூழ்ந்தறிபவன்., அவனே கண்ணியம் அளிப்பவன்., இழிவுபடுத்துபவன்., செல்வத்தை வழங்குபவன்., வறுமையில் ஆழ்த்துபவன்., தான் நாடுகின்றவற்றைத் தனது நுண்ணறிவுத் திறனுடன் செய்து கொண்டிருப்பவன்., ஒவ் வொருதினமும் ஒரு புதிய மாட்சியில் இருப்பவன்!
  பூமியின் பல பகுதிகளில் மலைகளை ஊன்றினான். நிலத் துக்கு உயிரூட்டக்கூடிய நீருடன் மேகங்களை அனுப்பினான்! உலகில் வாழும் அனைத்து மனிதர்கள் மீதும் மரணத்தை விதித்தான். அதன் நோக்கம், தீமை செய்தவர்களுக்கு- அவர் களின் தீமைக்குப் பகரமாகத் தண்டனையும் நன்மை செய் தோருக்கு- நல்ல முறையில் கூலியும் வழங்க வேண்டும் என்பதே!
  அழகும் நிறைவும் கொண்ட ஆற்றல்களுக்காக அல்லாஹ்வை நான் புகழ்கிறேன். அவனுடைய முழுமையான அருட்கொடைகளுக்காக அவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன் - நன்றி செலுத்துவதன் மூலமே அருட்கொடையும் உபகாரமும் மேலும் மேலும் அதிகரிக்கும்!
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று சாட்சி சொல்கிறேன். அவனுக்கு யாதொரு இணைதுணை இல்லை. அவனே ஆற்றல்மிக்க அரசன். முஹம்மத் நபி, அவனுடைய அடியார் - தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். அவர்கள் மனித - ஜின்னு இனத்தினர் அனை வருக்கும் தூதராக அனுப்பப்பட்டவர்கள்!
  நபியவர்கள்; மீதும் அவர்கள்; குடும்பத்தினர் மீதும் நபித் தோழர்கள் மீதும் அவர்களுக்குப் பின்னர் தோன்றிய வாய்மை மிக்க சான்றோர்கள் மீதும் காலமெல்லாம் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக !
  சகோதரர்களே! அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக நோன்பு மிகச் சிறந்த வணக்கமாகும். மிக உன்னதமான வழிபாடாகும். நோன்பின் சிறப்பு குறித்து பல நபிமொழிகள் வந்துள்ளன. அது பற்றி மக்களிடையே பல செய்திகள் எடுத்துரைக்கப்பட் டுள்ளன!
  நோன்பின் சிறப்புகளில் ஒன்று, அல்லாஹ் அதனை முற் காலச் சமுதாயங்கள் அனைத்தின் மீதும் விதித்திருப்பதும் அனைத்து மக்கள் மீதும் அதனை கடமையாக்கியிருப்பதுமா கும்.
  குர்ஆன் கூறுகிறது: “இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்களின் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள்மீதும் நோன்பு கடமை யாக்கப்பட்டுள்ளது., அதன் முலம் நீங்கள் இறையச்சம் உடை யோராய்த் திகழக்கூடும்” (2 : 183)
  நோன்பு ஒரு மகத்தான வழிபாடில்லை என்றிருந்தால், மேலும் அதனைக் கடைப்பிடித்தொழுகி அல்லாஹ்வுக்கு அடி பணிவதும் அதன் மூலம் நன்மை பெறுவதும் மனித குலத்துக் குத் தேவையில்லை என்றிருக்குமானால் அனைத்து சமுதாயங்கள் மீதும் அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கியிருக்க மாட்டான்!
  ரமளான் நோன்பின் மற்றொரு சிறப்பு என்னவெனில் பாவங் கள் மன்னிக்கப்படுவதற்கும் தீமைகள் மறைக்கப் படுவதற்கும் இந்தநோன்பு காரணமாக அமைந்திருப்பதாகும். அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள் :
  யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த் தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன” (நூல்: புகாரி, முஸ்லிம்)
  அதாவது, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும் தன் மீது நோன்பு கடமையாக்கப்பட்ட தைத் திருப்திப்பட்டவராகவும் - அதற்கான நன்மையை- நற் கூலியை எதிர்பார்த்தவராகவும் யார் நோன்பு நோற்றாரோ மேலும் அது கடமையாக்கப்பட்டதை வெறுக்காமலும் அதன் நற்கூலியில் சந்தேகம் கொள்ளாமலும் யார் நோன்பு நோற்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்!
  மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
  ஐங்காலத் தொழுகைகளும் ஜும்ஆ தொழுகைகளும் ரமலான் மாத நோன்புகளும் - அவ்வப்போதைய காலத்தின் பாவங்களைப் போக்கி விடுகின்றன., பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில்!” (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
  நோன்பின் இன்னொரு சிறப்பு என்னவெனில், அதன் நன்மையை இவ்வளவுதான் என ஒருகுறிப்பிட்ட எண்ணிக் கைக்குள் வரையறுத்துக் கூறமுடியாது. மாறாக நோன்பு நோற் பவருக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படுகிறது! மேலும் அபூ ஹ{ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறியதாக அண் ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:
  மனிதனின் எல்லா அமல்களும் அவனுக்குரியவையே! ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக அது எனக்குரியது., அதற்கு நானே கூலி வழங்குகிறேன். - நோன்பு என்பது ஒரு கேடயமாகும்.உங்களில் எவரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுகள் பேச வேண்டாம்., கூச்சலிட வேண் டாம்! யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால் - நான் நோன்பாளி என்று கூறிவிடட்டும்;. முஹம் மதின் உயிர் எந்த இறைவனின் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலில் இருந்து எழும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியைவிட அதிக மணம் உடையதாகும்! நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்! ஒன்று: நோன்பு திறக்கும்போது அடையும் மகிழ்ச்சி! இரண்டு : தன் இறைவனைச் சந்திக்கும்போது அடையும் மகிழ்ச்சி!”
  ஸஹீஹ் முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது: மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப் பாக வழங்கப்படுகிறது., ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது! இறைவன் சொல்கிறான்: நோன்பைத் தவிர! ஏனெனில் நிச்சயமாக அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்!- காரணம் தனது ஆசையையும் உணவையும் எனக்காக விட்டு விடுகிறான்! - இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புகளைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.
  முதலாவது சிறப்பு:
  ஏனைய அமல்களுக்கு மத்தியில் நோன்பை மட்டும் தனக்கு உரியதென்று அல்லாஹ் கூறியிருப்பதாகும் அவனிடத் தில் நோன்புக்குரிய சிறப்பும் அதன்மீது அவனுக்குள்ள பிரியமும் தான் இதற்குக் காரணம். அது மட்டுமல்ல அவனுக்காக மட்டுமே நோற்கப்படும் வழிபாடு எனும் முகஸ்துதியற்ற பேணு தல் என்பது நோன்பில் எடுப்பாக இருப்பதும் ஒரு காரண மாகும்.
  ஏனெனில் நோன்பு மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள ஓர் இரகசியமாகும்.அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அதனை அறிந்திட முடியாது. நோன்பின் மூலம் அல்லாஹ் விலக்கி யவற்றை - வேறு யாரும் இல்லாத தனி இடத்தில், நோன்பு நோற்பவரால் உட்கொள்ள முடியம்., ஆனால் எதையும் அவர் உட்கொள்வதில்லை! ஏனெனில் இறைவன் ஒருவன் இருக்கி றான்., தனிமையில்கூட - அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நோன்பாளி உறுதியாக நம்புகிறார்! இவற்றை உட் கொள்ளக்கூடாதென அந்த இறைவனே விலக்கியுள்ளான். எனவே அந்த இறைவனுக்காக இவற்றையெல்லாம் நோன்பாளி விட்டுவிடுகிறார்;., அவனது தண்டனைக்கு அஞ்சி - அவனது நற்கூலியிலும் நன்மையிலும் ஆவல் கொண்டு விட்டு விடு கிறார்;!
  இதனால்தான் அடியானுடைய இந்த நேரிய எண்ணத்தை - இந்த வாய்;மையை அல்லாஹ் மதிக்கிறான். அவன் நோற்கும் நோன்பை மட்டும்-அவனுடைய ஏனைய அமல்களுக்கு மத்தி யில் இறைவன் தனக்கெனச் சொந்தமாக்கிக் சொல்கிறான். மேலும்; கூறுகிறான்: அவன் (நோன்பாளி) தனது ஆசையை -தனது உணவுண்ணும் பழக்கத்தை எனக்காக விட்டு விடுகிறான் என்று!
  இவ்வாறு நோன்பை மட்டும் இறைவன் தனக்கென சொந்தமாக்கிக் கூறுவதன் பயன்கள் அனைத்தும்- ஸ{ஃப்யான் இப்னு உயைனா அவர்கள் சொன்னதுபோன்று - மறுமை நாளில் வெளிப்படும்! மறுமை நாளில் அல்லாஹ் தன் அடி யானிடம் கணக்கு கேட்பான். அவன் செய்;த அநீதிகளுக்கு, அவனுடைய எல்லா அமல்களில் இருந்தும் ஈடு செலுத்து வான். இறுதியில் நோன்பு மட்டுமே மிஞ்சிவிடும்போது ஈடு செலுத்தப்படாமலிருக்கும் ஏனைய அநீதிகளை அல்லாஹ் மன் னித்து விடுவான். பிறகு அந்த நோன்பின் பொருட்டு அவனைச் சொர்க்கத்தில் புகுத்துவான்!
  இரண்டாவது சிறப்பு : நானே இதற்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் நோன்பு குறித்து சொல்லியிருப்பதாகும்.
  நோன்புக்குக் கூலி வழங்குவது நான்தான் என்று தன்னோ டிணைத்து அல்லாஹ் சொல்லியிருப்பதன் காரணம், ஏனைய அமல் களுக்குரிய கூலி பல மடங்கு இரட்டிப்பாக்கப்படுகி றது., ஒரு நன்மைக்கு - அது போன்ற பத்து நன்மைகளுக் குரிய கூலி வழங்கப்பட்டு- எழு நூறு மடங்கு வரை - இன்னும் ஏராளமான கூலி இரட்டிப்பாக்கப் படுகிறது! ஆனால் நோன்புக்கோ - எண்ணிக்கை எவ்வளவு எனப்பாராமல் தாமே கூலி வழங்குவதாக அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வோ கொடை வள்ளல்களில் எல்லாம் மாபெரிய கொடையளன்! தர்மம் செய்கிறவர்களிலெல்லாம் மாபெரிய தர்ம கர்த்தா! கொடை என்பது வழங்குபவனின் அந்தஸ்தைப் பொறுத்து அமைகிறது. எனவே நோன்பு நோற்பவரின் கூலி கணக்கன்றி ஏராளமாக - தாராளமாக கிடைக்கிறது!
  நோன்பு என்பது இறைவழிபாட்டில் பொறுமையாய் நிலைத் திருப்பதும் இறைவன் விலக்கியவற்றை விட்டு வலகுவதில் (உள்ள கஷ்டத்தைப்)பொறுமையுடன் சகிப்பதுமாகும். மேலும் (உலக வாழ்க்கையில்) பசி, தாகம், உடல் பலவீனம், மனச் சோர்வு எனப் பல துன்பங்களைத் தாங்கிடும் வகையில் இறை வன் நிர்ணயித்த விதியையும் பொறுமையுடன் பொருந்திக் கொள்வதுமாகும். இவ்வாறு மூன்று வகையான பொறுமை கள் நோன்பில் ஒருங்கிணைகின்றன! எனவே நோன்பு நோற் பவர் பொறுமையாளர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவராகிறார்! - (பொறுமையாளர்களுக்கு, அவர்களின் கூலி அளவின்றியே வழங்கப்படும்!) (39 : 10)
  மூன்றாவது சிறப்பு:
  நோன்பு ஒரு கேடயமாகத் திகழ்வதாகும். அதாவது, வீணா னவற்றை விட்டும் கெட்ட பேச்சுகளை விட்டும் நோன்பாளி யைத் தடுக்கக்கூடிய - காக்கக்கூடிய பாதுகாப்புக் கவசமாக நோன்பு திகழ்கிறது! எனவேதான் நபி (ஸல்) அவர்கள், உங்;க ளில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும்போது அசிங்கமான கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம். கூச்சலிட வேண்டாம் என்று கூறினார்கள்!
  அது மட்டுமல்ல நோன்பு நரகத்தைவிட்டும் அவனைப் பாது காக்கிறது. இதன் அடிப்;படையில்தான் மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
  நோன்பு ஒரு கேடயமாகும். அதனைக்கொண்டு மனிதன் நரகத்தில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறான்!” (அறிவிப்பு: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்னத் அஹ்மத்)
  நான்காவது சிறப்பு
  நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ் விடத்தில் கஸ்தூரியைவிட மணமானது என்பதாகும். ஏனெ னில் அது நோன்பினால் ஏற்பட்டவிளைவாகும். ஆகவே அது அல்லாஹ்விடத்தில் நறுமணம் கமழுவதாகவும் அவனுடைய பிரியத்திற்கு உரியதாகவும் உள்ளது. நோன்பு அல்லாஹ் விடத்தில் மகத்தான அந்தஸ்தை பெற்றுள்ளது என்பதற்கு இதுவும் ஒர் ஆதாரமாகும். எந்த அளவுக்கு எனில், மக்களிடத் தில் அருவருக்கத்தக்க ஒன்று அல்லாஹ்விடத்தில் பிரியமா னதாக - மணம் கமழுவதாக ஆகிறது!
  ஐந்தாவது சிறப்பு
  நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டென்பதாகும். முதல் மகிழ்ச்சி, நோன்பு திறக்கும்பொழுது! இரண்டாவது மகிழ்ச்சி, இறைவனை அவன் சந்திக்கும்பொழுது!
  நோன்பு திறக்கும்பொழுது அவன் அடையும் மகிழ்ச்சி என்பது - எல்லா அமல்களிலும் சிறப்புமிக்கதான இந்த நோன்பைக் கடைப்பிடிக்கும் பேரருளை இறைவன் அவன் மீது பொழிந் ததை எண்ணிஅடையும் மகிழ்ச்சியாகும்..எத்தனையோ மக்கள் இந்தஅருட்பேற்றைப் பெறாமல் நோன்பைக் கைவிட்டு விடு கின்றனர்! நோன்பு திறந்த பின்னர் உண்ணவும் பருகவும் உடலுறவு கொள்ளவும் அல்லாஹ் அவனுக்கு அனுமதித்ததை எண்ணி மகிழ்ச்சி அடைவதும் இதில் சேரும். இவையாவும் (நோன்பில்) அவன் மீது தடுக்கப்பட்டிருந்தன!
  இறைவனைச் சந்திக்கும்போது அவன் அடையும் மகிழ்ச்சி என்பது அவன் நோற்று வந்த நோன்புக்காக மறுமையில் அல்லாஹ்;விடம் கூலி பெறும்பொழுது அவன் அடையும் மகிழ்ச்சியாகும்! இப்போது அதற்கான கூலியை நிறைவாகப் பெற்றுக்கொள்கிறான் அந்தக்கூலியின் பால் அந்நாளில் அவன் அதிகத் தேவையுடையவனாக இருப்பான். நோன்பாளிகள் எங்கே என்று, ‘ ரய்யான்’ எனும் வாசல் வழியாகச் சுவனத்தில் பிரவேசிப்பதற்காக அழைக்கப்படுவார்கள்.அவர்களல்லாத வேறு யாறும் அந்தவாசல்வழியாகப் பிரவேசிக்க மாட்டார்கள்!
  இந்த நபிமொழியில் நோன்பாளிக்கு ஓர் அறிவுரையும் வழங்கப் பட்டுள்ளது. அதாவது யாராவது அவனைத் திட்டி னால் அல்லது அவனுடன் ஷண்டைக்குப்போனால் பதிலுக்குப் பதில் என்கிற முறையில் அவனை அவன் எதிர் கொள்ளக் கூடாது! - இந்த அறிவுரை வழங்கப்பட்டது -ஏச்சும் பேச்சும் ஷண்டையும் அதிகரிக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர ஏசுபவனின் முன்னால் மௌனமாகிப் போக வேண்டும் என்ப தற்காக அல்ல! தான் ஒரு நோன்;பாளி என்பதை அவ னுக்கு அறிவித்துவிட்டு பதிலுக்குப்பதில் என்கிற மோதல் போக்கை அவனுடன் மேற்கொள்ளாதிருப்பது, நோன்பின் கண்ணியம் கருதியே தவிர பழிக்குப் பழி வாங்கிட நம்மால் முடியவில்லை என்பதனால் அல்ல! அல்லாஹ் கூறுகிறான்:
  (நபியே,) நன்மையும் தீமையும் சமமாக மாட்டா! மிகச் சிறந்த நன்யைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவடுவார். பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவருக் கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவருக்கும் இந்த உயர்த்தகுதி கிட்டுவதில்லை!” (41 : 34-36)
  நோன்பு நோற்றவருக்காக அவரது நோன்பு மறுமை நாளில் சிபாரிசு செய்யும் என்பதும் நோன்பின் பல சிறப்புகளில் ஒன்றாகும். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி)அவர்கள் அறிவிக்கி றார்கள்: நபியவர்கள் கூறினார்கள் :
  நோன்பும் குர்ஆனும் மறுமை நாளில் மனிதனுக்காக சிபாரிசு செய்யும்.நோன்பு சொல்லும்: என் இறைவா! உணவை விட்டும் மனஇச்சையை நிறைவேற்றுவதை விட்டும் நான் இவனைத் தடுத்து வைத்திருந்தேன்! எனவே இவன் விஷயத் தில் எனது சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக! குர்ஆன் சொல் லும்: நான் இவனை இரவில் நித்திரை கொள்ள விடாமல் தடுத்திருந்தேன்! எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! இவ்விரண்டின் சிபாரிசும் ஏற்றுக் கொள் ளப்படும்!” (நூல் : அஹ்மது)(தபரானியும் ஹாகிமும் இதனை அறிவித்துள்ளார்கள். ஹர்கிம் சொன்னார்கள்: இது முஸ்லிமின் நிபந்தனைப்படி ஸஹீஹ் ஆகும். முன்திரி சொல்லியுள்ளார்கள் : இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் ஹதீஸ{க்குச் சான்றாகத் திகழ்பவர்கள்.)
  அன்புச் சகோதரர்களே! நோன்பாளி, நோன்பின் ஒழுங்கு முறைகளைப் பேணினால்தான் இத்தகைய சிறப்புகளை அவர் அடைந்திட முடியும். எனவே உங்களது நோன்பை உறுதிப் படுத்தவும் அதனுடைய வரம்புகளைப் பேணிக் காத்திடவும் முயற்சி செய்யுங்கள்! மேலும் இது விஷயத்தில் நீங்கள் ஏதெனும் குறைபாடு செய்திருப்பின் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள்!
  யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பா யாக! எங்களுக்காகப் பரிந்துரை செய்யும் வகையில் அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும் எங்கள் பெற்றோரின் பாவங்களையும் அனைத்து முஸ்லிம்களின் பாவங் களையும் மன்னித்தருள்வாயாக!