2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  - சுவனத்தின் வர்ணனை!

  - சுவனத்தின் வர்ணனை!
  ________________________________________
  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்க! அவனே, தன்னை நம்பி ஆதரவு வைத்தவரை, அவரது எதிர்பார்ப்புக்கும் மேலான அந்தஸ்தில் சேர்த்துவைப்பவன்., பிரார்த்தனை செய்பவருக்கு, அவரது பிரார்த்தனைக்கும் அதிகமாக வழங்கக்கூடியவன்! புhவமீட்சி தேடுபவனின் பாவமீட்சியை ஏற்று மன்னித்து கருணை பொழியக்கூடியவன்!
  மனிதனைப் படைத்தான்., அவன் வசிப்பதற்கென ஒரு வீட்டை அமைத்தான். பயணத்திடையே இறங்குமிடமாக அவனுக்கு இவ்வுலகை ஆக்கினான். மறுவுலகம் என்பது மறைவாய் இருப்பதால் அதன் சிறப்பை அறியாதவன் இவ்வுலகத்தையே உறைவிடமாக்கிக் கொண்டான்! அப்படிப்பட்டவன் தன் அபிலாசைகளை அடையும் முன்பே பலவந்தமாக அங்கிருந்து பிடிக்கப்பட்டான். அவன் சம்பாதித்து வைத்த செல்வங்களோ பிள்ளைகளோ அவனுக்கு எவ்விதப் பயனும் அளிக்கவில்லை! இறுதியில் வலிமையிழந்து அவன் தோல்வியுற்றான்! அதோ! அவனது வீட்டு முகடுகள் மீது காக்கைகள் அமர்ந்து கரைந்து கொண்டிருப்பதை நீங்கள் காணவில்லையா, என்ன?
  ஆனால் இறையுதவி பெற்றவனோ உலகத்தின் ஏமாற்று நிலையை அறிந்தான். அதன் தோற்றத்தைக்கண்டு அவன் மயங்கவில்லை. அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும் சுவனத்தை நோக்கியும் அவன் விரைந்தான். அந்தச் சுவனம் வானம், பூமி அளவுக்கு விரிவானது! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்களுக்காக அது தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது!
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு இல்லை., அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்று ஆதாரங்களையும் அவற்றின் மூலாதாரங்களையும் அறிந்தவன் சாட்சி அளிப்பதுபோல் சாட்சி அளிக்கிறேன்!
  முஹம்மது நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி அளிக்கிறேன். நான்கு திசைகளில் இருந்தும் தென்றல் வீசிக்கொண்டிருக்கும் காலெமல்லாம் இந்தச் சாட்சியம் வழங்குகிறேன்!
  நபியவர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! ஊரிலும் பயணத்தின் போதும் எல்லா நேரங்களிலும் அவர்களின் இணை பிரியாத் தோழராய் இருந்த அபூபக்ர் மீதும்- உடைந்த வாள் என்று கூட அஞ்சாமல் வாளேந்தி இஸ்லாத்தைக் கட்டிக் காத்த உமர் மீதும் - துன்பம் வந்துற்றபோது பொறுமைக் கடலாகத் திகழ்ந்த உஸ்மான் மீதும் - கூர்வாள் கொண்டு பாய்வதற்கு முன்பே தமது தீரத்தைச் செயல் படுத்திக்காட்டிய அலீ மீதும் நபியவர்களின் குடும்பத்தினர் மீதும் தோழர்கள் மீதும் அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வாழ்ந்தவர்கள் மீதும் காலம் முழுவதும் அல்லாஹ் ஸலவாத் பொழிந்து கொண்டிருப்பானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  சகோதரர்களே! உங்கள் இரட்சகனிடம் இருந்து வழங்கப்படும் மன்னிப்பை நோக்கியும் சுவனபதியை நோக்கியும் விரைந்து செல்லுங்கள். அதன் அகலம் வானம் - பூமி அளவு விசாலமானதாகும். எந்தக் கண்ணும் கண்டிருக்காத, எந்தக் காதும் கேட்டிருக்காத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திருக்காத இன்பங்களும் அருட்பேறுகளும் அங்குண்டு!
  அல்லாஹ் கூறுகிறான்: பயபத்தியாளர்களுக்காக வாக்களிக் கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில், அதன் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிரந்தரமானவை. அதன் நிழலும் நிலையானது! (13 : 35)
  மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "பயபக்தியாளர்களுக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் உன்னதத்தன்மை என்ன வெனில், அதில் தூய்மையான நீராறுகளும் சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும் குடிப்பவாகளுக்குச் சுவையூட்டும் மது ஆறுகளும் சுத்தமான தேனாறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும் அங்கே அவர்களுக்கு எல்லா விதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடம் இருந்து மன்னிப்பும் கிடைக்கும். (47 : 15)
  வேறோரிடத்தில் கூறுகிறான்: மேலும் (நபியே, இவ்வேதத்தில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு- கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் நிச்சயம் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக! அங்கு ஏதேனும் ஒரு கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும்போதெல்லாம் - அக்கனிகள் பூமியின் கனிகளுக்குத் தோற்றத்தில் ஒத்திருப்பதால் - இத்தகைய கனிகள்தாம் முன்பு (உலகில்) நமக்கு உணவாக வழங்கப்பட்டதாக அவர்கள் கூறுவார்கள். இன்னும் அங்கு அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உண்டு. மேலும் அங்கு அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்" (2 : 25)
  "சுவனத்தின் நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்திருக்கும். மேலும் அதன் கனிகள் எப்போதும் (விருப்பப்படி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்கள் அருகில் இருக்கும். வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும். அதன் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்தவையாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பி இருப்பார்கள். அந்தக் கிண்ணங்களில் இஞ்சிச் சுவை கலந்த பானங்கள் அவர்களுக்கு அங்குக் குடிப்பதற்கு வழங்கப்படும். அது சுவனத்திலுள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ஸல்ஸபீல். மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழி யம் புரிவதற்)காகச் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெறித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்! அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிரைந்திருப்பதையும் மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்" (76:14-20)
  மற்றோர் இடத்தில், (வேறு சில முகங்கள்) உன்னதமான சுவனத்தில் இருக்கும். அவை அங்கு வீணானவற்றைச் செவியுறமாட்டா. ஓடிக் கொண்டிருக்கும் நீருற்று அங்கு உண்டு. உயர்ந்த கட்டடில்கள் அங்கிருக்கும். கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும். தலையணைகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்(88:10-16)
  இன்னோர் இடத்தில், "எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் அல்லாஹ் நுழைவிப்பான். அங்கு அவர்களுக்குத் தங்கக்காப்புகளும் முத்துக்களும் அணிவிக்கப்படும். பட்டு அங்கு அவர்களின் ஆடையாக இருக்கும்" (22 : 23)
  "அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது" (76 : 13)
  மென்மையான மற்றும் கனமான பச்சை நிறப்பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும் அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானம் புகட்டுவான் (76 : 21)
  (அந்தச் சுவனவாசிகள்) பச்சைக் கம்பளங்களிலும் விலை மதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணை வைத்து சாய்ந்திருப்பார்கள். (55 : 76)
  இறையச்சம் உடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள். தோட்டங்களிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள். தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகள் அணிந்து எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இதுவே அவர்களின் வெற்றி. மேலும் நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம். அங்கு அவர்கள் மனநிம்மதியுடன் எல்லாவித சுவையான பொருட்களையும் கேட்பார்கள் (44 : 51-55)
  செல்லுங்கள், சுவனத்தில்! நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்! (என்று அவர்களிடம் சொல்லப்படும்) (43 : 70)
  இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நானும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள். இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் எந்த ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்! உங்கள் இறைவனின் எந்தெந்த வெகுமதிகளைப் பொய்யென்பீர்கள்? அந்தப் பெண்கள் அழகு மிக்கவர்களாய் இருப்பார்கள். மாணிக்கத்தையும் முத்தையும் போன்று! (55 : 56-57)
  இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும் பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர். உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளைப் பொய்யெனக் கூறுவீர்கள்? கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட எழில்விழி மங்கைகள்" (55 :70-72)
  அவர்களுடைய செயல்களின் பயனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்! (32:17)
  எவர்கள் நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) மிக அழகிய நன்மையாகும். இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப்புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்கள். அவர்கள் அதில் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்" (10: 26)
  மிக அழகிய நன்மை என்பது சுவனம். ஏனெனில் அதனை விடவும் அழகிய இல்லம் வேறொன்றுமில்லை! அதிகப்படியான அருள் என்பது அல்லாஹ்வின் திருமுகத்தைத் தரிசிப்பதாகும். தனது கருணை மற்றும் கிருபை கொண்டு அல்லாஹ் அந்தப் பாக்கியத்தை நமக்கு வழங்குவானாக!
  சுவனம் பற்றி கூறுகிற வசனங்கள் - அதன் அருட்கொடைகளையும் மகிழ்ச்சியையும் இனிமையையும் அதன் எழிலையும் எடுத்துரைக்கும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம் வந்துள்ளன!
  சுவனத்து இன்பங்கள் பற்றி கூறும் நபிமொழிகள் வருமாறு:
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் கேட்டோம்: அல்லாஹ்வின்தூதரே! சுவனத்தைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். அதன் கட்டட அமைப்பு எத்ததையது? அதற்கு நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்: செங்கற்கள் தங்கம் - வெள்ளியினால் செய்யப்பட்டவை., அதன் பூச்சு கஸ்தூரியாகும். அதன் கற்கள், முத்து - மாணிக்கத்தினால் ஆனவை., அதன் மணல் குங்குமமாகும். சுவனத்தினுள் பிரவேசித்தவர் இன்பத்தில் திளைத்திருப்பார். சங்டத்துக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்., நிரந்தரமாக வாழ்வார். என்றைக்கும் மரணம் அடையமாட்டார்! அவருடைய ஆடைகள் கந்தலடையமாட்டா! அவரது இளமை என்றைக்கும் முடிவடையாது" (நூல்: முஸ்னத் அஹ்மத், திர்மிதி)
  உத்பா பின் கஸ்வான்(ரலி)அவர்கள் ஒருதடவை சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்; அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக இந்த உலகம் முடிவுறும் தருவாய்க்கு வந்துவிட்டது. விரைவாகக் கழிந்துகொண்டிருக்கிறது. கவிழ்க்கப்பட்ட பானையில் எவ்வளவு நீர் மீதியிருக்குமோ அவ்வளவு குறுகிய காலம் தான் எஞ்சியிருக்கிறது! நீங்கள் இங்கிருந்து முடிவே இல்லாத ஓர் இல்லத்திற்குச் செல்லக்கூடியவர்களாய் இருக்கிறீர்கள். எனவே உங்களோடு வரக்கூடிய ஒருசில நன்மைகளையேனும் கையோடு எடுத்துச் செல்லுங்கள்!
  எங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்டது: அதாவது, சுவனக்கதவின் நிலைகளில் இரண்டு நிலைகளுக்கிடையில் நாற்பதாண்டு பயண தூரம் உள்ளது. அவ்வளவு விசாலமான இடத்திலும் மறுமையின் ஒருநாள் வரும் போது அது மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும்" (நூல் : முஸ்லிம்)
  ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன. அவற்றில் ஒரு வாசலின் பெயா ரய்யான். அதில் நோன்பாளிகள் தவிர வேறு யாரும் பிரவேசிக்க மாட்டார்கள்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இதோ! பாருங்கள்! சுவனம் செல்ல யார் தயாராகப் போகிறீர்கள்? திண்ணமாக சுவனத்திற்கு நிகர் எதுவுமில்லை. கஅபாவுடைய இரட்சகனின் மீது சத்தியமாக! சுவனம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் ஒளி, அசைந்தாடும் மலர், நெடிதுயர்ந்த மாளிகை, நிறைந்தோடும் நதி, கனிந்து நிற்கும் பழம், அழகு சௌந்தர்யமான மனைவி, ஏராளமான ஆபரணங்கள், அமைதிமிகு நிறைந்த இல்லத்தில் நிரந்தரமான ஓய்விடம், சுவைமிகு பொருட்கள், பசுமைகள், உல்லாசமான உயர்வான மாளிகையில் மகிழ்வுகள், அருட்பாக்கியங்கள் ஆகியவையாகும்" தோழர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அதற்காகத் தயாராகக் கூடியவர்கள்தாம்!
  நபியவர்கள் சொன்னார்கள்: இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் - அவ்வாறே மக்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொன்னார்கள்" (நூல்: இப்னு மாஜா, பைஹகி) - இப்னு ஹிப்பான் தமது ஸஹீஹில் இதனை அறிவித்துள்ளார்கள். (இதன் அறிவிப்புத் தொடர் பலவீனமானதாகும்.)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. இறைவழியில் போர் புரியும் வீரர்களுக்காக அல்லாஹ் அவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே உள்ள தூரம், வானம்-பூமியின் தூரம் போன்றதாகும். நீங்கள் இறைவனிடம் இறைஞ்சுவதாயின் ஃபிர்தௌஸை கேட்டு இறைஞ்சுங்கள்! திண்ணமாக அது சுவனத்தின் நடுவிலும் சுவனத்தின் உச்சியிலும் உள்ளது. அங்கிருந்துதான் சுவனத்தின் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதன் மேலே கருணைமிக்க இறைவனின் அர்ஷ் உள்ளது" (நூல் : புகாரி)
  அபூ ஸயீதுல் குதிரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனவாசிகள் தங்களுக்கு மேலே பால்கனிகளில் இருப்போரைக் காண்பார்கள். கிழக்கு அல்லது மேற்கின் அடிவானத்தில் இலங்கக்கூடிய ஒளிரும் நட்சத்திரத்தை நீங்கள் பார்ப்பது போன்று பார்ப்பார்கள்! அது அவர்களின் படித்தரத்தின் ஏற்றதாழ்வினாலாகும்"
  தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இவை நபிமார்களின் அந்தஸ்துகளாயிற்றே! அவர்களல்லாதவர் யாரும் இவற்றை அடைந்திட முடியாதே! அதற்கு நபி(ஸல்) சொன்னார்கள்: சரிதான்! எனது உயிரை தன் கைவசம் வைத்திருக்கும் இறைவன் மீது சத்தியமாக! எவர்கள் அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு ரஸ_ல்மார்களை உண்மைப்படுத்தினார்களோ அவர்களும் இவற்றை அடைவார்கள்" (புகாரி)
  அபூ மாலிக்-அல் அச்அரி(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திண்ணமாக சுவனத்தில் உயரமான பால்கனிகள் உள்ளன. அவற்றின் வெளிப்பகுதியை உட்புறத்தில் இருந்து காணலாம். உள் நிலையை வெளிப்புறத்தில் இருந்தும் காணலாம்! யார் ஏழைக்கு உணவு அளித்தார்களோ நோன்பை நிரந்தரமாகக் கடைப்பிடித்தார்களோ, இரவில் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது தொழுதார்களோ அவர்களுக்கு அல்லாஹ் இவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். (நூல்: தபரானி)(இமாம் அஹ்மத் அவர்களும் இதனை அறிவித்துள்ளார்கள். அதில் - மேலும் கனிவாகவும் பேசினாரோ எனும் வாக்கியமும் உள்ளது.)
  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளனுக்குச் சுவனத்தில் ஒரு கூடாரம் உள்ளது. நடுப்பகுதி ஒரு காலி முத்தினால் அமைந்ததாகும் அது! வானத்தில் அதன் நீளம் அறுபது மைல்களாகும். இறைநம்பிக்கையாளனுக்கு அங்கு மனைவியர் இருப்பர்;. அவர்களிடம் அவன் போய்வந்து கொண்டிருப்பான். அவர்கள் சிலர் வேறு சிலரைக் காண முடியாது" (நூல்:புகாரி, முஸ்லிம்- அறிவிப்;பு: அபூ மூஸா(ரலி)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனம் செல்கிற முதல் குழுவினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள்! பிறகு அவர்களைத் தொடர்ந்து வரக்கூடிய குழுவினர் வானத்தில் அதிக அளவு இலங்குகிற தாரகையைப்போல் தோற்றமளிப்பார்கள். அதன் பிறகு வரக் கூடியவர்கள் பல படித்தரங்களில் இருப்பார்கள். சுவனவாசிகள் மல - ஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தமாட்டார்கள்., எச்சில் துப்பமாட்டார்கள். (அதாவது, எவ்வித அசுத்தமும் செய்யமாட்டார்கள்) அவர்களின் சீப்புகள் தங்கத்தினாலானவை, அவர்களின் (நறுமணப் புகைபோடும்) தூபக்கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணம் கமழும்! அவர்கள் அனைவரின் உடல் அமைப்பு ஒரே ஒரு மனிதனின் உடல் அமைப்பில் இருக்கும். (அனைவரும் ஒரே உடல் அமைப்பைப் பெற்றிருப்பார்கள்) தங்களின் ஆதி பிதா ஆதத் தின் 60 அடி உயரத்தைப் பெற்றிருப்பார்கள்" (நூல்:முஸ்லிம்)
  மற்றோர் அறிவிப்பில்: சுவனவாசிகளிடையே கருத்து வேறுபாடு இருக்காது. அவர்கள் பரஸபரம் கோபப்படமாட்டார்கள். அனைவரும் ஓர் இதயம் உடையவர்கள் போல் இருப்பார்கள்! காலையிலும் மாலையிலும் தங்கள் இரட்சகனைத் துதித்துக் கொண்டிருப்பார்கள்"
  இன்னுமோர் அறிவிப்பில் -அவர்களின் மனைவியர் ஹ_ருல் ஈன் எனும் எழில்விழி மங்கையராய் இருப்பர் என உள்ளது.
  ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) கூறினார்கள்: சுவனவாசிகள் சுவனத்pல் உண்பார்கள்., பருகுவார்கள்! ஆனால் எச்சில் துப்பமாட்டார்கள்., மலஜலம் கழிக்க மாட்டார்கள். மூக்கு சிந்தமாட்டார்கள்! தோழர்கள் கேட்டார்கள்: அப்படியானால் உணவின் நிலை என்ன? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ஒரு ஏப்பம் வரும்., வியர்வை வெளிப்படும்! அவ்வளவுதான்! அந்த வியர்வை கஸ்தூரி மணம் கமழும்! மூச்சு விடுவது போன்று -அல்லாஹ்வைத் துதிப்பதற்கும் புகழ்வதற்கும் அவர்களுக்கு உள்ளுதிப்பு அளிக்கப்படும்"(முஸ்லிம்)
  ஜைத் பின் அர்கம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எந்த இறைவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒரு சுவனவாசிக்கு உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது, ஆசைப்படுவது ஆகியவற்றில் நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படும். அவர்களின் இயற்கைத் தேவை என்பது வியர்வையாகி மேனிகளின் வழியாக வெளியேறும்! அது கஸ்தூரி மணம் போன்று கமழும்! அவர்கள் வயிறு ஒட்டியிருக்கும்" (முஸ்னத் அஹ்மத், நஸஈ) (முன்திரி அவர்கள், அத் தர்ஃகீப் வத் தர்ஹீப் எனும் நூலில் கூறியுள்ளார்கள்: இதன் அறிவிப்பாளர்கள் ஸஹீஹ் ஹதீஸில் ஆதாரப்பூர்வமாய் ஏற்கப்படுபவர்களாய் உள்ளனர். இமாம் தபரானியும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடர் கொண்டு இதனை அறிவித்துள்ளார்கள். இப்னு ஹிப்பானும் ஹாகிமும் கூட அறிவித்துள்ளார்கள்.)
  அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினாhகள்:"உங்களில் ஒருவருக்கு தனது வில் அளவுக்கு அல்லது காலின் பாதம் அளவுக்கு ஓர் இடம் சுவனத்தில் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தாகும். மேலும் சுவனவாசிகளிலுள்ள ஒரு பெண் சொர்க்கத்திலிருந்து பூமியை எட்டிப்பார்த்தால் சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள அனைத்தையும் பிரகாசிக்கச் செய்வாள்! மேலும் அவ்விரண்டுக்கும் இடையே உள்ள அனைத்தையும் மணம் கமழவும் செய்திடுவாள்! அவளது முக்காடு உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தாகும்" (நூல்: புகாரி)
  அனஸ்(ரலி) அவர்கள் மேலும் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனத்தில் அங்காடி ஒன்றுள்ளது. சுவனவாசிகள் ஒவ்வொரு ஜும்ஆ நாளிலும் அங்கு வருவர். தென்றல் காற்றடித்து அவர்களின் முகங்களிலும் ஆடைகளிலும் புழுதி வாரிப்போடும். அதனால் அவர்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெறுவார்கள். தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்வார்கள். மேலும் அவர்களிடம் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் வெளியே சென்ற பிறகு நீங்கள் அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்று விட்டீர்கள் என்று! அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களும் தான் இங்கிருந்து சென்ற பிறகு அதிக அழகையும் பிரகாசத்தையும் பெற்றுள்ளீர்கள்" (நூல்: முஸ்லிம்)
  அபூ ஸயீத்-அல் குதிரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனவாசிகள் சுவனத்தினுள் சென்றதும் ஓர் அழைப்பாளர் இவ்வாறு அறிவிப்பார்: நீங்கள் இங்கு ஆரோக்கியமாக வாழ்வீர்கள்., ஒருபோதும் நோயுற மாட்டீர்கள். இங்கு என்றென்றும் உயிர் வாழ்வீர்கள்., ஒரு போதும் மரணம் அடைய மாட்டீர்கள். இங்கு வாலிபத்துடன் இருப்பீர்கள்., ஒரு போதும் முதுமை அடையமாட்டீர்கள். செழிப்புடன் இருப்பீர்கள், ஒருபோதும் வறுமைக்குள்ளாக மாட்டீர்கள்! இது இந்த இறைவசனத்தின் கருத்தாகும்: (அந்நேரம்) அவர்களிடம் கூறப்படும்: நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இது தான். நீங்கள் செய்து வந்த நல்ல அமல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது" (7:43) (நூல்:முஸ்லிம்)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிருக்காத, எந்த மனிதனின் உள்ளதிலும் உதித்திருக்காத இன்பங்களை என் நல்லடியார்ளுக்காக நான் தயார் செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுவான். விரும்பினால் இந்த குர்ஆன் வசனத்தை ஓதுங்கள்:
  அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்" (32 : 17)
  நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சுவனத்தில் சென்றதும் ஓர் அறிவிப்பாளர் கூறுவார்: சுவனவாசிகளே! நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கென ஒரு வாக்குறுதி உள்ளது. அதனை உங்களுக்கு நிறைவேற்றித் தர அல்லாஹ் விரும்புகிறான் -அதற்கு அவர்கள் சொல்வார்கள்: என்ன அது? அவன் எங்களின் எடைத்தட்டுகளைக் கனப்படுத்தவில்லையா? மேலும் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? மேலும் அவன் எங்களைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து, நரகத்தை விட்டும் எங்களைத் தூரமாக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அப்போது அவர்களுக்குத் திரை விலக்கப்படும். இறைவனை அவர்கள் காண்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை விடவும் அதிக விருப்பமான அதிகக் கண்குளிர்ச்சியான எதையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கமாட்டான்!, (நூல்: முஸ்லிம்)
  அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்களின் இந்த அறிவிப்பும் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது: சுவனவாசிகளிடம் அல்லாஹ் கூறுவான்:"எனது உவப்பை உங்களுக்கு நான் அருளுகிறேன்! இனி ஒரு போதும் உங்களின் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்"
  யா அல்லாஹ்! உன்னுடைய சுவனங்களில் நிரந்தரமாகத் தங்கி வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! அங்கு உனது உவப்பை எங்கள் மீது அருள்வாயாக! உன் முகத்தைக் காண்பதன் இன்பத்தையும் உனது சந்திப்பின் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக!


  24 வது மஜ்லிஸ் - சுவனம் செல்வோரின் பண்பு நலன்கள்
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எல்லாப் பொருட்களையும் உருவாக்கினான். அவற்றின் படைப்பமைப்பைச் செம்மையாக்கினான். வானங்களும் பூமியும் (ஆதியில்) ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பின்னர் அவற்றைத் தனித்தனியே பிரித்தவன் அவனே! தனது விவேகத்தின் அடிப்படையில் மனிதர்களை நற்பேறுடையவர்கள் - துர்பேறுடையவர்கள் என இரு பிரிவினர்களாக்கினான். நற்பேற்றை அடைந்திட சில நெறிகளை காரணிகளை வகுத்தான். அதிக இறைபக்தி உடையவர்கள் அவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். இறுதி விளைவுகளை அகப்பார்வையால் பார்த்தான். நீடித்து நிற்பவை எவையோ அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்!
  அவனை நான் புகழ்கிறேன். அந்தப் புகழைக் கொண்டு அவனுக்குரிய கடமையை நான் முழுமை செய்யவில்லை. அவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நன்றி செலுத்தப்படுவதற்கு என்றென்றும் தகுதியுடையவனாக அவன் திகழ்கிறான்.
  வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்று சாட்சி சொல்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. எல்லா மனிதர்களின் அடிமைத்தளையையும் தனது பிடியில் வைத்திருக்கும் எஜமானன்!
  முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார், தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். குணத்திலும் உடல் அமைப்பிலும் எல்லா மனிதர்களிலும் நிறைவானவர்கள் அவர்கள்!
  நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! மேலும் நபியைப் பின்பற்றி வாழ்வதன் அனைத்துச் சிறப்புகளையும் முந்திச் சென்று சேகரித்துக்கொண்ட நபித்தோழர் அபூ பக்ர் மீதும் -நீதியை நிலைநாட்டிய, நீதியின் விசயத்தில் எவரிடத் திலும் தயவு தாட்சண்யம் காட்டாத உமரின் மீதும்- சஹாதத் எனும் உயித் தியாகத்திற்குத் தம்மை ஒப்படைத்த, அதில் இருந்து தற்காப்பைக்கூட ஏற்படுத்திக்கொள்ளாத உஸ்மான் மீதும் - அழியக்கூடிய (உலக) வாழ்வை விற்றுவிட்டு நிலைத் திருக்கக் கூடிய (மறுமை) வாழ்வை வாங்கிக்கொண்ட அலீ மீதும் - நபியவர்களின் குடும்பத்தினர் மீதும் - இறைமார்க்கத்திற்கு மெய்யான உதவியை நல்கிய நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  அன்புச் சகோதரர்களே! சுவனத்தின் வர்ணனை பார்த்தீர்கள். அதன் அருட்கொடைகளையும் அங்குள்ள மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கேட்டீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அமல்கள் செய்கிறவர்கள் இதற்காகத்தான் அமல் செய்ய வேண்டும். போட்டிபோட்டுக்கொண்டு முந்துபவர்கள் இவற்றிற்காகத்தான் போட்டிபோட வேண்டும்! அதற்கான தகுதி நிச்சயமாக இவற்றிற்கே உண்டு! மனிதன் சாதாரணமான ஆசைகளை விட்டுவிட்டு இவற்றை அடைவதில் ஆசை கொண்டு வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்வதற்கு இவையே தகுதியானவை! சுவனத்தை அடைவதற்காக அமல் செய்வது எப்படி? அதன் பால் கொண்டு சேர்க்கும் வழி எது? என்று நீங்கள் கேட்டால் இதோ! அல்லாஹ் அவற்றை விளக்கிக் கூறுகிறான், தன் சிறப்புக்குரிய ரஸ_ல் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது இறக்கியருளிய திருக் குர்ஆனில்!
  இறைவனிடம் இருந்து வழங்கப்படும் மன்னிப்பை நோக்கியும் சுவனத்தை நோக்கியும் விரைந்து செல்லுங்கள். அதன் அகலம் வானங்கள் பூமியின் அளவுக்கு விரிவானது. அது இறையச்சம் உடையோருக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எத்தகையோர் எனில், வசதியுள்ள நிலையிலும் வசதியற்ற நிலையிலும் அவர்கள் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின்தவறு)களை மன்னித்து விடுவார்கள் - அல்லாஹ் இத்தகைய உயர்ந்த பண்பாளர்களை நேசிக்கிறான் - மேலும் அவாகள் எத்தகையோர் எனில், மோசமான செயலைச் செய்து விட்டாலோ (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்டாலோ உடனே அல்லாஹ்வை அவர்கள் நினைத்துத் தம் பாவங்களுக்காக அவனிடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். ஏனெனில் அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? - தமது செயல்களில் - வேண்டுமென்றே பிடிவாதமாக இருக்க மாட்டார்கள்"(3:33-35)
  இவைதாம் சுவனத்திற்குச் செல்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய பண்புகள்.
  முதல் பண்பு: இறையச்சம். - அவர்கள் தங்கள் இரட்சகனுக்குப் பயந்து வாழக்கூடியவர்கள்., அவன் தரும் வேதனையில் இருந்து பாதுகாப்பு மேற்கொள்கிறார்கள்., அவன் நன்மையை ஆதரவு வைத்து, அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் நாட்டம் கொள்கிறார்கள்., அவனது தண்டனைக்கு அஞ்சி அவன் விலக்கிய காரியங்களை விட்டு விடுகிறார்கள்! - இப்படி அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவர்களே பயபக்தியாளர்கள்!
  இரண்டாவது பண்பு: செல்வத்தைச் செலவு செய்தல்! எவற்றைச் செலவு செய்ய வேண்டும்., எவ்வாறு செலவு செய்ய வேண்டுமென அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டதோ அவற்றினை - அந்த முறைப்படி அவர்கள் செலவு செய்வார்கள்! செல்வத்தைச் செலவு செய்தல் என்பது, ஜகாத் கொடுப்பதாகும். தர்மங்கள் செய்வதுமாகும். மேலும் யார் யாருக்குக் கொடுத்து உதவ அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குத் கொடுத்து உதவுவது, ஜிஹாத் எனும் இறைவழிப் போருக்காக வழங்குவது, இதர நன்மையான வழிகளில் செலவு செய்வது ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
  வசதியிலும் சரி வறுமையிலும் சரி இவ்வாறே அவர்கள் செல்வத்தை செலவு செய்து கொண்டிருப்பார்கள். அவர்களின் வளவாழ்வும் செழிப்பும் - செல்வத்தை நேசிக்கும்படி அவர்களைத் தூண்டாது., செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆசையில் கருமித்தனம் செய்யவும் சொல்லாது. இன்னும் வசதியற்ற நிலையும் சங்கடமும் அவர்களுக்கு வந்தால், அது - தேவைக்குப் பணமில்லாமல் போய் விடுமோ எனப்பயந்து செல்வத்தைத் தேக்கிவைக்கும் படியும் அவர்களை ஏவாது!
  மூன்றாவது பண்பு: சினத்தை அடக்கிக்கொள்வது. அவர்கள் கோபம் வரும் வேளையில் அதனை அடக்கிக் கொள்வார்கள்., வரம்பு மீறிச் செயல்பட்ட மாட்டார்கள்., கோபத்தின் காரணத்தால் பிறர் மீது பொறாமை கொள்ளவுமாட்டார்கள்!
  நான்காவது பண்பு: மக்(களின் தவறு)களை மன்னிப்பதாகும். தங்களுக்கு அநீதி இழைத்தவர்களை அவர்கள் மன்னிப்பார்கள். பழிக்குப்பழி வாங்கும் சக்தி இருந்தாலும் தங்களுக்காகப் பழிக்குப்பழி வாங்கமாட்டார்கள்!
  அழகிய முறையில் பணி செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான் என்கிற வசனத்தில், மன்னிப்பதென்பது அழகிய முறையுடன் இருந்தால் தான் அது புகழுக்குரியது எனும் சைக்கினை உள்ளது. மன்னிப்பதற்கு ஏற்ற நேரம், ஏற்ற இடம் என்றால் தான் மன்னிக்க வேண்டும். அது சீர்திருத்தத்துடன் அமைய வேண்டும். மன்னிப்பதன் மூலம் வரம்பு மீறுபவனின் குற்றம் மேலும் அதிகரிக்கும் என்றால் அது புகழுக்குரிய மன்னிப்பு அல்ல! நற்கூலியைப் பெறுகிற மன்னிப்பு அல்ல! குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: எவர் மன்னிக்கிறாரோ மேலும் சீர்திருத்தம் செய்கிறாரோ அவரது கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது! (42 : 40)
  ஐந்தாவது பண்பு: மேலும் அவர்கள் எத்தகையோர் எனில் மோசமான செயலைச் செய்துவிட்டாலோ தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டாலோ உடனே அல்லாஹ்வை நினைத்துத் தம்முடைய பாவங்களுக்கு அவனிடம் மன்னிப்பு கோருவார்கள்
  மோசமான செயல் என்பது மோசமான பாவங்களாகும். அதாவது கண்ணியம் அளிக்கப்பட்ட உயிரை நியாயமின்றி கொலை செய்வது, பெற்றோரை நிந்திப்பது, வட்டி உண்பது, அநாதையின் சொத்தை உண்பது, யுத்தத்தில் புறமுதுகிட்டு ஓடுவது, விபச்சாரம் செய்வது, திருடுவது போன்ற பெரும் பாவங்களைக் குறிக்கும்.
  தமக்குத் தாமே அநீதி இழைத்தல் என்பது பொதுவாக சிறிய, பெரிய பாவங்கள் அனைத்தையும் உட்படுத்தும். அவற்றுள் ஒன்றை அவர்கள் செய்தால் உடனே இறைக் கட்டளையை நாம் மீறிவிட்டோமே என அஞ்சி இறைவனின் மாண்பை நினைவு கூருவார்கள்! அவனது மன்னிப்பையும் கிருபையையும் நினைப்பார்கள். அவற்றிற்கான காரணிகளை மேற்கொள்ள முயலுவார்கள்! தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் தேடுவார்கள்., அவற்றிற்குத் தண்டனை வழங்காமல் அல்லாஹ் அவர்களைப் பொறுத்துக் கொள்ளவும் அவற்றை மறைத்திடவும் கோருவார்கள்!
  அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யார்? எனும் இறைவாக்கில் இது பற்றிய சைக்கினை உள்ளது. அதாவது, அவர்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு யாரிடமும் மன்னிப்பு கேட்பதில்லை., அவனைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பவர் இல்லை என்பதனால்!
  ஆறாவது பண்பு: தாம் செய்தவற்றில் - அறிந்து கொண்டே அவர்கள் பிடிவாதமாக இருக்கமாட்டார்கள் என்பதாகும். -அதாவது, பாவச் செயலை - அது பாவம் என அறிந்து கொண்டே தொடர்ந்து செய்யமாட்டார்கள். தாம் யாருக்குப் பாவம் செய்கிறோம்., அந்த இறைவனின் மகத்துவம் என்ன என்பதை அறிவார்கள். அவனது மன்னிப்பு அருகிலேயே உள்ளது என்றும் அறிவார்கள். உடனே தமது பாவச்செயலை விட்டும் முற்றாக விலகிடவும் பாவமன்னிப்புத் தேடவும் விரைவார்கள்!
  பாவத்தைப் பாவமென அறிந்தே அதில் தொடர்ந்து ஈடுபடுவதென்பது சிறிய பாவங்களைக்கூட பெரியபாவங்களாக மாற்றுவதுடன் கடுமையான, அபாயகரமான தீமைகளின்பால் மனிதனைப் படிப்படியாக இழுத்துச் சென்று தள்ளிவிடும்!
  மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
  திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றிபெற்று விட்டார்கள். அவர்கள் எத்தகையவாகள் எனில், தங்களது தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கிறார்கள். மேலும் வீணானவற்றை விட்டும்; விலகியிருக்கிறார்கள். இன்னும் ஜகாத்தை (முறைப்படி) செயல்படுத்தக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். மேலும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்., தங்களுடைய மனைவியரிடமோ தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவாகள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் இதற்கு அப்பாலும் ஆசைபட்டார்களோ அவர்களே வரம்பு மீறக் கூடியவர்கள் மேலும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தங்களுடைய வாக்குறுதிகளையும் பேணிக்காக்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். மேலும் தங்கள் தொழுகைகளையும் பேணிவருபவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள்தாம் ஃபிர்தௌஸ் எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர். அங்கு என்றென்றும் தங்கிவாழ்வார்கள்" (23: 1-11)
  முதல் பண்பு: இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்பதாகும். இவர்கள் அல்லாஹ்வின்மீது ஈமான் கொண்டார்கள். மேலும் அவனுடைய மலக்குகள், அவனுடைய வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி - அதன் நன்மை, தீமை - என எவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை கொள்வது கடமையோ அவை அனைத்தின் மீதும் நம்பிக்கை கொண்டார்கள். ஒப்புதலையும் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தக் கூடியதான சொல்லிலும் செயலிலும் கீழ்ப்படிதலை வலியுறுத்தக்கூடிய வகையில் ஆழமான நம்பிக்கை கொண்டார்கள்.
  இரண்டாவது பண்பு: தங்களது தொழுகையில் பயபக்கதியை மேற்கொள்வார்கள் என்பதாகும். தொழுகையில் அவர்களின் உள்ளம் ஆஜராகியிருக்கும். உறுப்புகள் அமைதியாக இருக்கும். தொழுகையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணத்துடன் இருப்பார்கள். அவனது வேதத்தைக் கொண்டு அவனுடன் உரையாடுவார்கள். அவனது திக்ரை கொண்டு அவன் பக்கம் நெருங்குவார்கள். அவனிடம் பிரார்த்தனை செய்து அவனிடம் தஞ்சம் புகுவார்கள். இவ்வாறாக அவர்கள் அகத்திலும் புறத்திலும் பயபக்தியுடனிருப்பார்கள்!
  மூன்றாவது பண்பு: வீணானவற்றை விட்டும் விலகிடுவார்கள் என்பதாகும். வீணானவை என்பது எவ்விதப்பயனும் நன்மையுமில்லாத பேச்சுகளும் செயல்களுமாகும். தங்களது கண்டிப்பான போக்கு, ஆற்றல்மிக்க உறுதிப்பாடு ஆகியவற்றால் இவை அனைத்தை விட்டும் விலகி நிற்பார்கள். மதிக்கத்தக்க தங்களது நேரங்களை பயனுள்ள காரியங்களிலே தவிர வேறெதிலும் செலவழிக்கமாட்டார்கள். தங்கள் தொழுகையைப் பயபக்தியுடன் அவர்கள் பாதுகாத்தது போன்று தங்கள் நேரங்களையும் வீணாகாமல் பாதுகாத்தார்கள். வீணானவற்றை விட்டு விடுவது என்பது அவர்களின் குணமாக இருக்கும் பொழுது தீங்களிக்கும் காரியங்களை விட்டு விடுவார்கள் என்பது இன்னும் தெளிவான விசயமாகும்.
  நான்காவது பண்பு: ஜகாத்தை (முறைப்படி) செயல்படுத்தக் கூடியவர்களாய் இருக்கிறார்கள் என்பதாகும். இங்கு ஜகாத் என்பது, எந்தச் சொத்தில் ஜகாத் கொடுப்பது கடமையோ அந்தச் சொத்திலிருந்து கட்டாயமாகக் கொடுக்கக்கூடிய நிதி என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது எந்தெந்தச் சொல்- செயல்களைக் கொண்டு அவர்களின் உள்ளம் தூய்மை அடையுமோ அவை அனைத்துமாகும் என்றும் பொருள்கொள்ளலாம். (ஜகாத் என்றால் தூய்மை எனும் அகராதிப்பொருளின் அடைப்படையில்!)
  ஐந்தாவது பண்பு: தம்முடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள் என்பதாகும். - தங்களுடைய வெட்கத்தலங்களை விபச்சாரம் மற்றும் ஓரினச் சேர்க்கையை விட்டும் பாதுகாக்கக்கூடியவர்கள். ஏனெனில் இந்தச் செயல்களில் - அல்லாஹ்வுக்குப் பாவம் செய்வது மட்டும் அல்ல, ஒழுக்கச் சீரழிவும் சமூகச் சீரழிவும் உள்ளன!
  வெட்கத்தலத்தைப் பாதுகாத்தல் என்பது இதனை விடவும் விரிந்த பொருள் கொண்டதாகவும் இருக்கலாம். அதன்படி வெட்கத்தலத்தைப் பார்ப்பது, தொடுவது ஆகியவற்றறை விட்டுப் பாதுகாப்பதையும் அது உள்ளடக்கும்.
  அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர் எனும் சொற்றொடரில் இந்தக் கருத்தின் பக்கம் சைக்கினை உள்ளது. அதாவது, (பெண்களைப் பார்ப்பது, தொடுவது போன்ற) செயல்களுக்காகப் பொதுவாக மனிதன் பழிப்புக்கு உள்ளாகுவதே வார்த்தையின் அசல் பொருளாகும். ஆனால் மனைவியிடமும் அடிமைப் பெண்களிடமும் இப்படி நடப்பதால் பழிப்பு வராது. ஏனெனில் இவர்களிடம் அப்படி நடக்க வேண்டியதுள்ளது. மனித இயல்பின் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதும் சந்ததி உருவாக்கமும் இன்னபிற நலன்களும் இதில் உள்ளன!
  எவர்கள் இதற்கு அப்பாலும் ஆபை;படுகிறார்ளோ அவர்களே வரம்பு மீறக்கூடியவர்கள் ஆவர்" எனும் சொற்றொடரில்- ரகசியப் பழக்கம் எனும் சுய இன்பம் அனுபவித்தல் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளது. காரணம் அது, மனைவி - அடிமைப் பெண் ஆகியோருக்கு அப்பால் ஆசைப்படுகிற செயலாகும்.
  இவை தவிர இன்னும் பல பண்பு நலன்கள் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இப் பண்பு நலன்களை குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதன் நோக்கம், சுவனம் சென்றடைய விரும்புகிறவர்கள் அப்பண்பு களைத் தம் வாழ்வில் மலரச் செய்ய வேண்டும் என்பதாகும்!
  இவை பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் ஏராளம் சொல்லப்பட்டுள்ளது!
  நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஒருவர் கல்வியைத் தேடி ஏதேனும் வழியில் நடந்தால் அதன் மூலம் அவருக்கு சுவனத்திற்குச் செல்லும் வழியை அல்லாஹ் எளிதாக்கிக் கொடுக்கிறான்" (அறிவிப்பு:அபூ ஹ{ரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)
  மேலும் அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்கள், எந்த அமல்களின் மூலம் அல்லாஹ் தவறுகளை மன்னிப்பானோ, மேலும் அந்தஸ்துகளை உயர்த்துவானோ அந்த அமல்களை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? எனக் கேட்டார்கள். தோழர்கள் சொன்னார்கள்: ஆம், அல்லாஹ்வின் தூதரே! -அப்போது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: மனம் விரும்பாதிருக்கும் நிலையில் முழுமையாக உளு செய்வது, பள்ளிவாசல்களுக்கு அதிக எட்டுகள் வைத்து நடந்து செல்வது, ஒரு தொழுகைக்குப்பின் மற்றொரு தொழுகைக்காகக் காத்திருப்பது" (நூல் :முஸ்லிம்)
  உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களில் ஒருவர் உ; செய்து, அதனைப் பூரணமாகவும் செய்து பிறகு அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லா ஷரீக லஹ{ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹ{ வ ரஸ_லுஹ{
  (பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. என்று நான் சாட்சியம் சொல்கிறேன். மேலும் முஹம்மத் நபி, அவனுடைய அடியார், தூதர் என்றும் சாட்சியம் சொல்கிறேன்)
  என்று கூறினார் எனில் சுவனத்தின் எட்டு வாசல்களும் அவருக்காக நிச்சயம் திறக்கப்படும். விரும்பிய வாசல் வழியாக அதில் அவர் புகலாம்" (நூல்: முஸ்லிம்)
  மேலும் உமர்(ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் பாங்கு சொல்பவரைத் தொடர்ந்து உளப்பூர்வமாகப் பதில் சொல்கிறாரோ அவர் நிச்சயம் சுவனம் புகுவார்"(நூல் : முஸ்லிம்)
  உஸ்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "எவர் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி (அவன் உவப்பைத் தேடியவராகப்) பள்ளிவாசல் கட்டினாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஓர் இல்லம் கட்ட நிச்சயம் ஏற்பாடு செய்கிறான்" (நூல் : புகாரி, முஸ்லிம்)
  உபாதா பின் ஸாமித்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஐந்து தொழுகைகளை அடியார்கள் மீது அல்லாஹ் கடமையாக்கினான்;;. எவர் அவற்றை நிறைவேற்றி வருகிறாரோ மேலும் எந்த ஒரு தொழுகையையும் அதன் கடமையை லேசாகக் கருதி வீணாக்கவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் அவரைச் சுவர்க்கத்தில் புகுத்துவதற்கு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது" (நூல்: முஸ்னத் அஹ்மத், அபூ தாவூத், நஸாயி) (இதற்கு இன்னும் பல அறிவிப்புத் தொடர்கள் உள்ளன்., அவை ஒவ்வொன்றும் பரஸ்பரம் வலிமை கூட்டுகின்றன!)
  ஸெளபான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எந்த அமலை கொண்டு அல்லாஹ் என்னைச் சுவனம் புகுத்துவான் என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நீர் அதிகம் ஸ{ஜூது செய்வீராக! (தொழுவீராக!) நீர் அல்லாஹ்வுக்காக எந்த ஒரு ஸ{ஜூது செய்தாலும் அதன் மூலம் உமக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தியே தீருவான்., உம்மை விட்டும் ஒரு தவறை அகற்றவும் செய்வான்!, (நூல் : முஸ்லிம்)
  உம்மு ஹபீபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிமான ஓர் அடியார் தினமும் கடமையான தொழுகை நீங்கலாக 12 ரக்அத் அதிகப்படியாகத் தொழுது வந்தால் அவருக்காகச் சுவனத்தில் ஒரு வீடு கட்டக் கண்டிப்பாக அல்லாஹ் ஏற்பாடு செய்வான்" (நூல்:முஸ்லிம்)
  - அவை ளுஹர் தொழுகைக்கு முன் 4 ரக்அத், அதற்குப் பின் 2 ரக்அத், மஃரிப் தொழுகைக்குப் பின் 2 ரக்அத், இசா தொழுகைக்குப் பின் 2 ரக்அத், ஃபஜ்ர் தொழுகை;கு முன் 2 ரக்அத் ஆகும்.
  முஆத் பின் ஜபல்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபியிடம் கேட்டேன்: என்னைச் சுவனத்தில் சேர்க்கக் கூடிய ஓர் அமலை அறிவித்துத் தாருங்கள் என்று! அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: முக்கியமானதொரு விசயத்தைக் கேட்டு விட்டீர். அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கினானோ அவருக்குத் திண்ணமாக அது இலகுவானதே. அல்லாஹ்வை நீர் வணங்க வேண்டும்., அவனுடன் எதனையும் இணையாக் கூடாது. மேலும் நீர் தொழுகையை நிலை நாட்ட வேண்டும்., ஜகாத் கொடுக்க வேண்டும். ரமளான் மாதம் நோன்பு நோற்கவேண்டும்., கஅபா ஆலயத்தை ஹஜ் செய்யவும் வேண்டும்! (நூல்: முஸ்னத் அஹ்மத், திர்மிதி)
  ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்தில் ஒருவாசல் உள்ளது., அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். மறுமை நாளில் நோன்பாளிகள் அதன் வழியாக வருவார்கள். அவர்கள் அல்லாத யாரும் அதன் வழியாக வரமாட்டார்கள்" (புகாரி, முஸ்லிம்)
  நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ஓர் உம்ராவுடன் இன்னோர் உம்ரா செய்வது - அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட புண்ணியமான ஹஜ்ஜுக்கு சுவனமே கூலியாகும்" (புகாரி, முஸ்லிம்)
  ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு மூன்று பெண்மக்கள் இருந்து அவர்களுக்கு அவர் பாதுகாப்புக் கொடுத்து, இரக்கம் காட்டி அவர்களைப் பொறுப்புடன் கண்காணித்து வந்தாரெனில், கண்டிப்பாக அவருக்குச் சுவர்க்கம் கடமையாகிவிடுகிறது. அப்பொழுது கேட்கப்பட்டது: அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இரண்டு பெண்மக்களாய் இருந்தால்? அதற்கு நபியவர்கள் : இரண்டு பெண்மக்களாய் இருந்தாலும் சரியே! என்றார்கள். அறிவிப்பாளர் சொல்கிறார்: ஒரே ஒரு பெண்மகள் இருந்தால்? என்று கேட்டிருந்தால்கூட - ஒரே ஒரு மகள் என்றாலும் சரியே அவர் சுவனம் புகுவார் என்றே நபியவர்கள் சொல்லியிருப் பார்கள் எனக் கருதப்பட்டது" (நூல்: அஹ்மத்) (இதன் அறிவிப்புத் தொடர் பலவீனமானதாகும். ஆயினும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் பல இதற்குச் சான்றாக உள்ளன. அவற்றுள் ஒன்று வருமாறு: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவரேனும் ஒருவருக்குப் பெண்பிள்ளை(கள் இருந்து அவர்)களின் மூலம் அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டும் அவர்களிடம் அவர் நல்லமுறையில் நடந்து கொண்டால் அவர்கள் இவருக்கு நரகத்தை விட்டும் திரையாக அமைவார்கள் (நூல்: முஸ்லிம்))
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பெரும்பாலும் மக்களை சுவனத்திற்குக் கொண்டு சேர்க்கும் நற்பணிகள் யாவை என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வுக்குப் பயந்து வாழ்வதும் நற்குணமும்" (திர்மிதி, இப்னு ஹிப்பான்) (இதன் அறிவிப்புத் தொடர் ஸஹீஹ் அல்ல., ஆனால் இதன் வாசகம் ஸஹீஹ்.)
  இயாழ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: மூன்று பேர் சுவனம் செல்லக் கூடியவர்களாவர். ஒருவர்: நீதி செலுத்தக்கூடியராகவும் தர்ம சிந்தையுள்ளவராகவும் உள்ள, இறையுதவி வழங்கப்பட்ட ஆட்சியாளர். இரண்டாமவர்: இரக்க சிந்தையும் இளகியமனமும் கொண்ட - எல்லா உறவினர்களிடமும் முஸ்லிம்களிடமும் கனிவுடன் நடந்து கொள்ளும் மனிதர். மூன்றாமவர்: குழந்தை குட்;டிகளை உடையவராயினும் யாரிடமும் கையேந்தாமல் தன்மானத்துடன் வாழக்கூடிய முஸ்லிம் (இது நீளமான ஹதீஸின் ஒரு பகுதி)
  சகோதரர்களே! நபி(ஸல்) அவர்களின் ஒரு சில அருள் மொழிகளாகும் இவை! சுவனத்திற்குச் செல்லும் மக்களின் நடைமுறைகளில் பெரும்பாலானவற்றை இவை விளக்குகின்றன. சுவனம் செல்ல விரும்பும் மக்களுக்கு! இத்தகைய பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்வதை எமக்கும் உங்களுக்கும் அல்லாஹ் இலகுவாக்கித் தர வேண்டும் என்றும் அவற்றில் நம்மை நிலைப்படுத்த வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் நான் இறைஞ்சுகிறேன்! திண்ணமாக அவன் பெரும் கொடையாளன்., கண்ணியமிக்கவன்!