2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  ரமளான் நிறைவடையும் போது ...!

  ரமளான் நிறைவடையும் போது ...!
  ________________________________________
  எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தயாள குணம் உடையவன், மாண்புமிக்கவன், கொடை வழங்குபவன், பேருபகாரம் புரிபவன், பெருங்கருணையாளன்! அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்து அவை ஒவ்வொன்றின் விதியையும் நிர்ணயித்தான். ஷரீஅத் - சட்ட நெறிகளை அருளினான்., அவற்றை எளிமையாக்கவும் செய்தான். அவன் நுண்ணறிவாளன்! யாவும் அறிந்தவன். அவனே படைப்புகளை முதன்முறையாகப் படைத்தான். அவனே அவற்றை இறுதியிலும் படைப்பான்! கோளங்களை இயக்கி அவற்றை ஓடச் செய்தான்.
  சூரியன் (இறைவனின் வல்லமைக்கான பிறிதொரு சான்றாகும்) அது தனக்குரிய இடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இது, பேரறிவுடையவனும் வல்லமைமிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும். சந்திரனும் (இன்னொரு சான்றாகும்) அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து- வளைந்து போன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகிவிடுகிறது! சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது., மேலும் இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தம் சுற்றுவட்டங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன!
  பேருபகாரத்துடன் நேர்வழி காட்டியதற்காக அவனை நான் புகழ்கிறேன். எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியதற்காக அவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!
  திண்ணமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்று சாட்சி சொல்கிறேன். அவன் அரசன், உயர்ந்தவன், உன்னதமானவன்! ஆதியும் அவனே. அவனுக்கு முன்பு எதுவுமில்லை! அந்தமும் அவனே. எல்லாவும் அழிந்த பின்பு அவன் மட்டும் எஞ்சியிருப்பான்! அவனே வெளிரங்கமானவன். எதுவும் அவனை மிகைக்கக்கூடியதல்ல! அவனே அந்தரங்கமானவன். அவனுக்கு அப்பால் எதுவும் இல்லை! அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிந்தவன்!
  முஹம்மத் நபி, அல்லாஹ்வின் அடியார் தூதர் என்றும் சாட்சி சொல்கிறேன். அவர்கள் தாம் இறைத்தூதர்கள் அனைவரினும் சிறப்பு வழங்கப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டவர்கள்!
  நபியவர்கள் மீது அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! உண்மைப்படுத்தக்கூடிய உண்மையாளர்கள் அனைவரினும் சிறந்தவரான நபித்தோழர் அபூ பக்ர் மீதும், இறைமார்க்கத்தில் வலிமை மிக்கவர் என்று புகழப்பட்ட உமர் மீதும், பாவிகளின் கரத்தால் அநியாயமாகக் கொலையுண்ட உஸ்மான் மீதும், நபியவர்களின் நெருங்கிய உறவினராகத் திகழ்ந்த அலீ மீதும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! நபியவர்களின் குடும்பத்தினர், தோழர்கள், அவர்களை வாய்மையுடன் பின்பற்றி வந்தவர்கள் அனைவர் மீதும் மறுமை நாள் வரையிலும் அல்லாஹ் ஸலவாத் பொழிவானாக! அனைவருக்கும் ஈடேற்றம் அளிப்பானாக!
  சகோதரர்களே! திண்ணமாக ரமளான் மாதம் நம்மிடமிருந்து விடைபெறும் காலம் சமீபமாகி விட்டது. அது திரும்பிச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது!
  திண்ணமாக இந்த மாதம் - அதில் நீங்கள் செய்த அமல்களின் அடிப்படையில் உங்களுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ சாட்சி சொல்லக்கூடியதாக உள்ளது! எவர் இந்தமாதத்தில் நல்லமல்கள் செய்தாரோ அவர் அதன் பேரில் அல்லாஹ்வைப் புகழட்டும். அழகிய நற்கூலியைப் பெறுவது கொண்டு மகிழ்வு பெறட்டும்! எவர் இந்த மாதத்தில் தீய செயல்கள் செய்தாரோ அவர் தூய்மையான பாவமீட்சியாக பாவமீட்சி தேடித் தன் இறைவனின் பக்கம் மீளட்டும்! பாவ மன்னிப்புத் தேடுபவரின் பாவமன்னிப்புக் கோரிக்iயை அல்லாஹ் ஏற்று அவர் மீது மீண்டும் கருணை பொழிகிறான்!
  திண்ணமாக அல்லாஹ், இந்த மாதத்தின் இறுதியில் சில வணக்க வழிபாடுகளை உங்களுக்கு வகுத்துத் தந்துள்ளான். அவை, அல்லாஹ்வின் பக்கம் உங்களுக்கு அதிக நெருக்கத்தை ஏற்படுத்தித் தரும்! உங்களது இறைநம்பிக்கையில் அதிக வலிமையைக் கொடுக்கும். மேலும் உங்களது வினைச் சுவடியில் அதிக அளவு நன்மைகளைப் பதிவு செய்யும்!
  ஜகாதுல் ஃபித்ர் எனும் பெருநாள் சிறப்புத் தர்மத்தை அல்லாஹ் உங்களுக்கு வகுத்துத்தந்துள்ளது பற்றி முன்னர் நாம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மேலும் இம்மாதம் நிறைவடையும் போது - சூரியன் மறைந்து பெருநாள் இரவு தொடங்கியது முதல் - பெருநாள் அன்று அஸர் தொழுகை வரை தக்பீர் சொல்லும் முறையை அல்லாஹ் உங்களுக்கு வகுத்தளித்துள்ளான்!
  அல்லாஹ் கூறுகிறான்:
  (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவாக்குவதற்காகவும் அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதன் பொருட்டு நீங்கள் அல்லாஹ{ அக்பர் (அல்லாஹ் பெரியவன்) எனக் கூறி அவனது மேன்மையைப் போற்றுவதற்காகவும் தான் (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது) மேலும் நீங்கள் நன்றி செலுத்துவோராயும் ஆகலாம்" (2 : 185)
  இந்த தக்பீரை இவ்வாறு முழங்க வேண்டும்:
  அல்லாஹ{ அக்பர், அல்லாஹ{ அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹ{ அல்லாஹ{ அக்பர், அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அல்ஹம்து.
  பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன்., அல்லாஹ் மிகப் பெரியவன்., வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் மிகப்பெரியவன், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
  ஆண்கள் உரத்த குரலில் தக்பீர் சொல்வது ஸ{ன்னத்- நபி வழியாகும். மஸ்ஜித்களிலும் வீதிகளிலும் வீடுகளிலும் தக்பீர் முழங்க வேண்டும். இதன் நோக்கம், அல்லாஹ்வின் கண்ணியத்தைப் பிரகடனப்படுத்துவதாகும். அவனுக்கு வழிபாடு செய்வதையும் நன்றி செலுத்துவதையும் பகிரங்கப்படுத்துவதுமாகும்.
  பெண்கள் இந்த தக்பீரை மெதுவாகச் சொல்ல வேண்டும். ஏனெனில் பர்தா அணிந்து உடலை மறைத்துக் கொள்ளும்படியும் குரலைத் தாழ்த்தும்படியும் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது.
  இம்மாதம் நிறைவடைந்த போது அல்லாஹ்வைக் கண்ணியப் படுத்துவதற்காகவும் கௌரவிப்பதற்காகவும் எல்லா இடங்களிலும் மக்கள் தக்பீர் முழங்கும் நிலை எவ்வளவு அழகானது!
  • அல்லாஹ{ அக்பர்
  • அல்ஹம்து லில்லாஹ்
  • லா இலாஹ இல்லல்லாஹ்
  அல்லாஹ் பெரியவன் அல்லாஹ{க்கே எல்லாப்புகழும் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை - என்றெல்லாம் மக்கள் முழங்கும் முழக்கம் இதோ! வான் வெளிகள் எங்கும் நிறைந்து எதிரொலிக்கிறது! அப்பொழுது அவர்களின் உள்ளம் அல்லாஹ்வின் கருணையை எதிர்பார்க்கிறது. அவனது தண்டனைக்கு அஞ்சுகிறது!
  பெருநாள் தினத்தன்று அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்குப் பெருநாள்த் தொழுகையை விதித்துள்ளான். அது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பூரண நிலையாகும்! நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு தம் சமுதாயத்தில் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் கட்டளையிட்டார்கள். அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவசியம். ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:
  இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள்" (47 : 33)
  நபி(ஸல்) அவர்கள் பெருநாள்த் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள். பெருநாள்த் தொழுகை அல்லாத வேறு தொழுகைகளை வீடுகளில் தொழுவதே பெண்களுக்குச் சிறந்தது என்பதுடனே! பெருநாள்த் தொழுகை கட்டாயக் கடமை என்பதற்கு இந்தக் கட்டளை ஆதாரமாகும்.
  உம்மு அதிய்யா(ரலி) என்கிற பெண்மணி அறிவித்துள்ளார்கள்: நோன்புப் பெருநாள்த் தொழுகையிலும், ஹஜ்ஜுப் பெருநாள்த் தொழுகையிலும் கலந்து கொள்வதற்காகப் பெண்களை (வீடுகளிலிருந்து) வெளியே அழைத்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். குடும்பப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள், குமரிப் பெண்கள் அனைவரையும் அழைத்து வருமாறு (கட்டளையிட்டார்கள்) மாதவிடாய்ப் பெண்களோ தொழுமிடங்களை விட்டும் விலகி நிற்பார்கள்! ஆனால் நற்காரியங்களிலும் முஸ்லிம்களின் துஆ(பிரார்த்தனை)களிலும் கலந்த கொள்வார்கள்! நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்திக்கு ஜில்பாப் (துப்பட்டி) இல்லாமலிருக்கலாமே? அதற்கு நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அவளுடைய சகோதரி தனது துப்பட்டியை அவளுக்கு அணிக்கட்டும்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  ஜில்பாப் என்பது பெண்கள் தங்கள் உடலை மூடிக்கொள்கிற முழுநீள அங்கி, பர்தா போன்ற ஓர் ஆடையாகும்.
  நோன்புப்பெருநாள் அன்று தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன் பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பது ஸ{ன்னத் - நபிவழியாகும். மூன்றாக, ஐந்தாக அல்லது அதை விட அதிகமானாலும் அவற்றை ஒற்றை எண்ணாக அமைத்து உண்ண வேண்டும்.
  ஏனெனில் அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று பேரீத்தம் பழங்களை உண்ணாமல் வெளியே புறப்பட மாட்டார்கள். அவற்றை ஒற்றைப்படைக் கணக்கில் உண்பார்கள்" (நூல்: முஸ்னத் அஹ்மத், புகாரி)
  பெருநாள்த் தொழுகைக்குச் செல்பவர் வாகனத்தில் போகாமல் நடந்தே செல்ல வேண்டும். நடக்க இயலாமை, தொழும் இடம் தூரமாக இருப்பது போன்ற காரணம் இருந்தாலே தவிர! ஏனெனில் அலீ(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: "பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்வது ஸ{ன்னத் - நபிவழியாகும்" (நூல்: திர்மிதி - அவர்கள் சொன்னார்கள்: இது ஹஸன் தரத்திலானது. (இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஒற்றைக்கண்ணரான ஹாரிஸ் உள்ளாhர். ஹதீஸ் கலையில் ஹாபிழ்களாக உள்ளோரில் பெரும்பாலோர் இவரைப் பலவீனப்படுத்தியுள்ளார்கள். அவர்களில் சிலரே இவரை நம்பகத்தன்மையுடையவர் என்று சொல்லியுள்ளனர்.)
  அழகிய ஆடை அணிவதும் அழகுபடுத்திக் கொள்வதும் ஆண்களுக்கு ஸ{ன்னத் - நபிவழியாகும். ஏனெனில் உமர்(ரலி) அவர்கள் கடைத்தெருவில் விற்பனைக்கிருந்த ஒரு பட்டு ஜுப்பாவை வாங்கி அதனை நபியவர்களிடம் கொண்டுவந்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இதனை விலைக்கு வாங்குங்கள். பெருநாளைக்கும் தூதுக்குழுவினர் வரும் போதும் இதனை நீங்கள் அணிந்து உங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம்" என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: "எவருக்கு மறுமைப் பாக்கியம் இல்லையோ அவரது ஆடையாயிற்றே இது"
  இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொன்னதன் காரணம் அது பட்டுத்துணி என்பதே! பட்டாடை அல்லது தங்கத்தினாலான ஆடை எதனையும் ஆண்கள் அணியக்கூடாது. ஏனெனில் இவ்விரண்டும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் விலக்கப்பட்டவையாகும்.
  ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் பெருநாள்த் தொழுகைக்கு அவர்கள் எவ்வாறு செல்லவேண்டுமெனில், நறுமணம் பூசாமல், அலங்காரம் செய்யாமல், ஒப்பனையையும் ஒய்யாரத்தையும் காட்டிக் கொள்ளாமல், முகத்தை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் பர்தா அணியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஒப்பனையையும் ஒய்யாரத்ததையும் காட்டிக்கொண்டு வீதியில் திரியக்கூடாது என்றும் நறுமணம் பூசக்கூடாதென்றும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது!
  தொழுகைக்காகப் பள்ளிவாசல் மைதானத்தில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டத்தைக் கண்டு அவன் எதை நினைத்துப் பார்க்க வேண்டுமெனில், மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் அவனது உயர் சமூகத்தில் ஒன்று திரண்டிருப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தப் பொருநாள் கூட்டத்தில் மக்களுக்கு மத்தியில் வித்தியாசமான நிலைகளை அவன் காண்கிறாhன். இதன் மூலம் நாளை மறுமையின் பெரிய அளவிலான வித்தியாசத்தை அவன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
  அல்லாஹ் கூறுகிறான்: "அவர்களில் சிலருக்கு வேறு சிலரை விட எவ்வாறு நாம் சிறப்பு அளித்துள்ளோம் என்பதைப் பார்ப்பீராக! மேலும் மறுவுலகம் தான் அந்தஸ்துகளாலும் பெரியது. சிறப்பளிப்பதிலும் பெரியது" (17 : 21 )
  மேலும் இந்த ரமளான் மாதத்தை அடைந்து அதில் தொழுகை, நோன்பு மற்றும் (குர்ஆன்) ஓதுதல், தர்மம் செய்தல் போன்ற இலகுவான வணக்க வழிபாடுகளைச் செய்திட அல்லாஹ் அவனுக்கு அருள் புரிந்துள்ளதைக் குறித்து அவன் மகிழ்ச்சி அடைய வேண்டும். திண்ணமாக இது உலகை விடவும் அதிலுள்ள அனைத்தை விடவும் சிறந்ததாகும்!
  (நபியே!) கூறுவீராக: அல்லாஹ் அளித்த சிறப்பையும் அவனது அருளையும் கொண்டே அவர்கள் மகிழ்வடைந்திட வேண்டும். இது அவர்கள் திரட்டிக் கொண்டிருக்கும் (உலகத்துச்) செல்வங்களை விடவும் சிறந்ததாகும்" (10 : 58)
  (உறுதியான) ஈமானுடனும் மறுமைக் கூலியை எதிர் பார்த்தும் ரமளானில் நோன்பு நோற்பதும் தொழுவதும் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய குற்றங்களிலிருந்து விடுபடுவதற்குரிய காரணிகளாய் உள்ளன என்பதில் ஐயமில்லை!
  ஓர் இறைநம்பிக்கையாளன் நோன்பையும் தொழுகையையும் நிறைவுபடுத்தியது குறித்து மகிழ்வடைகிறானெனில் அது, குற்றங்களிலிருந்து அவன் விடுபடுகிறான் எனும் அடிப்படையில் ஆகும்.
  ஆனால் பலவீனமான ஈமான் உடையவன் - நோன்பைப் பூர்த்தியாக்கியது குறித்து மகிழ்வடைகிறானெனில் அதன் காரணம் வேறு! அவன் மீது நோன்பு பாரமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருந்தது. இப்போது அதிலிருந்து அவன் விடுபட்டு விட்டதால் மகிழ்ச்சி அடைகிறான்! இரண்டு மகிழ்ச்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது!
  சகோதரர்களே! திண்ணமாக ரமளான் மாதம் முடிவடைந்து விட்டாலும் இறைவிசுவாசியின் அமல்கள் மரணம் வரையிலும் தொடர்கின்றன., அதற்கு முன் முடிவடைவதில்லை!
  அல்லாஹ் கூறுகிறான்: மரணம் உமக்கு வரும் வரை உம் இறைவனை வணங்கிவழிபடுவீராக" (51 : 99) வேறோர் இடத்தில்,
  இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் மேலும் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் அன்றி மரணம் அடைந்திட வேண்டாம்" (3:102)
  அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய அமல்கள் அனைத்தும் முடிந்து போய்விடுகின்றன. அமல்கள் முடிவடைவதற்கு மரணத்தைத் தவிர பிறிதோர் எல்லையை நபி(ஸல்) அவர்கள் நிர்ணயிக்க வில்லை!
  எனவே ரமளான் மாதம் சென்று விட்டால் நோன்பு எனும் வழிபாட்டை விட்டு ஓர் இறைநம்பிக்கையாளன் தொடர்பு அற்றுப் போக மாட்டான்! நோன்பு என்பது ஆண்டு முழுவதும் நடைமுறையில் இருந்து வரும் வழிபாடேயாகும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
  அபூ அய்யூப் - அல் அன்ஸாரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ரமளான் மாதம் நோன்பு நோற்று பிறகு தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவர் போல் ஆகிறார்" (நூல் : முஸ்லிம்)
  ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமளானோடு ரமளான் நோன்பு நோற்று வருவதும் காலமெல்லாம் நோன்பிருப்பதாகும்" (நூல் : முஸ்னத் அஹ்மத், முஸ்லிம்)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
  என் உயிர் நேசரான நபி(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு எனக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அவற்றில் ஒன்றாக ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதைக் குறிப்பிட்டார்கள்"
  அந்த மூன்று நாட்களும் அய்யாமுல் பீழ் எனும் நிலவுடைய நாட்களாய் இருப்பது சிறந்தது. ஆவை தாம் பிறை பதின்மூன்று, பதினான்பு, பதினைந்து ஆகிய நாட்களாகும். ஏனெனில் அபூ தர்ரு(ரலி) அவர்கள் கூறினார்கள்:
  அபூ தர்ரே! மாதத்தில் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பீராயின் பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோன்பு நோற்பீராக" (நூல்: அஹ்மத், நஸாயி) (இப்னு ஹிப்பான் அவர்களும் இதனை அறிவித்துள்ளார்கள். ஸஹீஹ் தரத் திலானது என்றும் சொல்லியுள்ளார்கள். மேலும் பல அறிவிப்புச் சாள்றுகளும் இதற்கு உண்டு., அவற்றின் மூலம் இது வலிமை பெறுகிறது!)
  அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: "அது கடந்த மற்றும் நிகழ் ஆண்டுகளின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகிறது" (நூல்: முஸ்லிம்)
  முஹர்ரம் மாதத்தில் 10ஆம் நாளின் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அது சென்ற ஆண்டின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆகிறது" (நூல் : முஸ்லிம்)
  மேலும் திங்கள் கிழமையில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குச் சொன்னார்கள்: "அது எத்தகைய நாளெனில் அன்று தான் நான் பிறந்தேன். அன்று தான் என் மீது வஹ{எனும் இறையருட்செய்தி இறக்கப்பட்டது" (நூல் : முஸ்லிம்)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது: ரமளான் மாதத்திற்குப் பிறகு எது சிறந்த நோன்பு? அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: ரமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பு" நூல் : முஸ்லிம்
  ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எந்த மாத்திலும் முழு மாதமும் நோன்பு நோற்பவர்களாய் நபி(ஸல்) அவர்களை நான் கண்டதில்லை. ரமளான் மாதத்திலே தவிர! எந்த மாதத்திலும் பெரும்பாலான நாட்களில் நோன்பு நோற்பவர்களாய் அவர்களை நான் கண்டதில்லை., ஷஅபான் மாதத்திலே தவிர" மற்றோர் அறிவிப்பில் - ஷஅபான் மாதத்தில் ஒரு சில நாட்களைத் தவிர பெரும்பாலான நாட்களில் நோன்பு நோற்பவர்களாய் இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்" (நூல்: புகாரி, முஸ்லிம்)
  மேலும் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி(ஸல்) அவர்கள் திங்கள் கிழமைகளின் நோன்பை எதிர்பார்த்துத் தேடிப் பெறுபவர்களாய் இருந்தார்கள்" (நூல்: திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்) - அபூ தாவூதில் இந்த ஹதீஸ், உஸாமா பின் ஜைத்(ரலி) அவர்களின் அறிவிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  மேலும் அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் (இறைவனின் முன்னிலையில் அமல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன். நான் நோன்பாளியாக இருக்கும் நிலையின் என்னுடைய அமல்கள் எடுத்துக்காட்டப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்" (திர்மிதி) (இது பலீனமான ஹதீஸ். ஆனாலும் இதற்கு வலிமை கூட்டுகிற அறிவிப்புச் சான்று இதற்குண்டு., ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது : திங்கள் மற்றும் வியாழக்கிழமை தோறும் அமல்கள் (இறைவன் முன்னிலையில்) எடுத்துக் காட் டப்படுகின்றன)
  ரமளான் மாத இரவின் சிறப்புத் தொழுகை முடிந்துவிட்டாலும் திண்ணமாக இரவுத்தொழுகை என்பது ஆண்டு முழுவதும் ஒவ்வோர் இரவிலும் கடைப்பிடிக்க வேண்டிய தீனின் - இறை மார்க்கத்தின் நடைமுறையாக இருந்து வருகிறது. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் மூலம் உறுதி செய்யப்பட்டதாக உள்ளது.
  முகீரா பின் ஷ{அபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "திண்ணமாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரு பாதங்களும் வீங்குகிற அளவுக்கு தொழுது கொண்டிருப்பார்கள் (மற்றோர் அறிவிப்பில்) இரவில் தொழுது கொண்டிருப்பார்கள் (என உள்ளது) அது குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சொன்னார்கள்: நான் நன்றி செலுத்தும் அடியானாக இருக்க வேண்டாமா?" (நூல் : புகாரி)
  அப்துல்லாஹ் பின் ஸலாம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே! ஸலாம் சொல்லும் வழக்கத்தைப் பரவலாக்குங்கள்., உணவு வழங்குங்கள். இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழுங்கள். இரவில் மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். (இவ்வாறு செய்வீர்களாயின்) நீங்கள் நிம்மதியாக சுவனம் புகுவீர்கள்" (நூல்: திர்மிதி) - அவர்கள் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் ஆனது என்று சொல்லியுள்ளார்கள். (இமாம் அஹ்மத் அவர்களும் இதனை அறிவித்துள்ளார்கள். பலஅறிவிப்புச் சான்றுகளும் இதற்குண்டு. அவற்றின் மூலம் ஸஹீஹின் தரத்தை இது எட்டுகிறது!)
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கடமையான தொழுகைக்குப் பிறகு சிறப்பு மிக்க தொழுகை இரவுத் தொழுகையாகும்" (முஸ்லிம்)
  - இரவுத் தொழுகை என்பது வித்ரு தொழுகை உள்பட நஃபிலான அனைத்துத் தொழுகைளையும் உள்ளடக்கும். இரண்டிரண்டு ரக்அத்தாக தொழு கொண்டிருக்க வேண்டும். அதிகாலை உதயமாகிவிடுமோ என அஞ்சினால் ஒரு ரக்அத் தொழ வேண்டும். அதுவரை தொழுத அனைத்துத் தொழுகைளையும் அது ஒற்றைப் படையாக்கி விடும். விரும்பினால் முன்னர் நான்காவது மஜ்லிஸில் விளக்கப்பட்ட முறைப்படியும் தொழலாம்.
  அபூ ஹ{ரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அருட்பாக்கியமும் உயர்வும் உடைய நம்முடைய இரட்சகன் ஒவ்வொரு இரவிலும் இரவின் மூன்றின் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருக்கும்போது உலகத்து வானத்திற்கு இறங்கி வருகிறான். இவ்வாறு கூறுகிறான்: என்னிடம் பிரார்த்தனை செய்பவர் யாரேனும் உண்டா? நான் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள இருக்கிறேன்! என்னிடம் யாசிப்பவர் எவரேனும் உண்டா? நான் அவருக்குக் வழங்க இருக்கிறேன்! என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் எவரேனும் உண்டா? நான் அவரை மன்னிக்க இருக்கிறேன்" (நூல் : புகாரி, முஸ்லிம்)
  கடமையான தொழுகைகளுக்கு முன்பும் பின்பும் நிறைவேற்றப்படும் றவாதிப் எனும் ஸ{ன்னத் தொழுகைகள் பன்னிரண்டு ரக்அத் ஆகும். ளுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு. அதற்குப் பின்பு இரண்டு. மஃரிப் தொழுகை;குப் பின்பு இரண்டு. இஷா தொழுகைக்குப் பின்பு இரண்டு. ஸ{ப்ஹ{ தொழுகைக்கு முன்பு இரண்டு!
  உம்மு ஹபீபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டேன்: முஸ்லிமான ஓர் அடியான் கடமையான தொழுகை நீங்கலாக ஸ{ன்னத்தான பன்னிரண்டு ரக்அத்-ஐத் தினமும் அல்லாஹ்வுக்காகத் தொழுது வந்தால் அல்லாஹ் அவனுக்கு சுவனத்தில் ஓர் இல்லம் கட்டித் தரச் செய்வான்" (நூல்: முஸ்லிம்) - மற்றோர் அறிவிப்பில், தினமும் யார் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அந்தத் தொழுகைகளின் பயனாக சுவத்தில் ஓர் இல்லம் கட்டப்படுகிறது" என உள்ளது.
  கடமையான ஐங்காலத் தொழுகைளுக்குப் பிறகு திக்ர் (இறைவனைத் துதி) செய்யுமாறு அல்லாஹ்வும் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்) அவர்களும் அதற்கு ஆர்வம் ஊட்டியுள்ளார்கள்.
  நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும் நிலையிலும் உட்கார்ந்திருக்கும் நிலையிலும் படுத்திருக்கும் நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்" ( 4 : 103)
  நபி(ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸலாம் கொடுத்தார்களெனில் மூன்று தடவை பாவமன்னிப்புக் கோருவார்கள். பிறகு தொடர்ந்து சொல்வார்கள் :
  அல்லாஹ{ம்ம அன்த்தஸ்ஸலாம் வமின்கஸ்ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்இக்ராம்
  (யா அல்லாஹ்! நீ ஈடேற்றம் அளிப்பவன்! உன்னிடம் இருந்தே ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியமும் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுகள் உடையவன்)
  மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 33 தடவை ஸ{ப்ஹானல்லாஹ் (பொருள்: அல்லாஹ்வைத் தூயவன் என்று துதிக்கிறேன்) என்றும் 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் (பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் 33 தடவை அல்லாஹ{அக்பர் (பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும் சொன்னாரோ - இவை 99 தடவைகளாகும் - பிறகு 100 ஐ நிறைவுபடுத்தி-
  லாஇலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷழீக்கலஹ_ லஹ{ல்முல்கு வ லஹ{ல்ஹம்து வஹ{வ அலாகுல்லி ஷையின் கதீர்
  (வணக்கதிற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை., அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே. புகழ் அனைத்தும் அவனுக்கே. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன்)
  -என்றும் யார் ஓதினாரோ அவருடைய தவறுகள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன., அவை கடலின் நுரை அளவு அதிகம் இருந்தாலும் சரியே" (நூல் : முஸ்லிம்)
  சகோதரர்களே! வழிபாடுகளை நிறைவேற்றுவதில் நன்முயற்சி செய்யுங்கள். தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்து விடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூயவாழ்வையும் மரணத்திற்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்!
  அல்லாஹ் கூறுகிறான் :
  ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகிறாரோ அவரை (இவ்வுலகில்) தூயவாழ்வு வாழச் செய்வோம். (மறுவுலகிலும்) அத்தகையயோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்" (16:97)
  யா அல்லாஹ்! ஈமான் - நம்பிக்கையிலும் நற்செயல் புரிவதிலும் எங்களை உறுதியோடு இருக்கச் செய்வாயாக! தூய வாழ்வு கொண்டு எங்களை வாழச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களைச் சேர்த்துவைப்பாயாக!