2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  ஹஜ் - உம்றா பிரார்த்தனைகள்

  ஹஜ் - உம்றா பிரார்த்தனைகள்

  ________________________________________
  ஹஜ்ஜின் அடிப்படைக் கடமைகள்
  1) இஹ்ராம் தரித்தல்
  2) ஸயி செய்தல்
  3) தவாஃப் சுற்றுதல்
  4) அரஃபாவில் தங்குதல்
  ஹஜ்ஜின் 2 ம் நிலைக் கடமைகள்
  1) மீகாத்தில் இஹ்ராம் கட்டுதல்
  2) அரஃபாவில் சூரியன்மறையும் வரை தங்குதல்
  3) முஸ்தலிஃபாவில் தங்குதல்
  4) பிறை 11-12-13 இரவுகளில் மினா தங்குதல்
  5) தூண்களில் வரிசைப்படி கல் எறிதல்
  6) தலைமுடி மழித்தல் -குறைத்தல்
  7) விடைபெறும் தவாப் செய்தல்
  ஹஜ்ஜின் ஸ{ன்னத்கள்
  1) இஹ்ராம் தரிக்கும்பொழுது குளித்தல்
  2) வெள்ளை ஆடைகளில் (ஆண்கள்) இஹ்ராம் தரித்தல்
  3) தல்பியா சொல்லுதல்
  4) அரஃபா நாளின் இரவு (பிறை 8 மாலையில்) மினாவில் தங்குவது
  5) மக்கா நகருக்குச் சென்றவுடன் செய்யும் தவா குபில் முதல் மூன்று சுற்றுகளில் சுற்று வேகமான நடையை (ஆண்கள் மட்டும்) மேற்கொள்ளல்., வலது புஜம் திறந்திருக்குமாறு மேலங்கி அணிதல்
  6) ஹஜருல் அஸ்வத் முத்தமிடுதல்
  உம்றாவின் கடமைகள்
  1) இஹ்ராம்
  2) தவாஃப்
  3) ஸயி
  4) தலைமுடி மழித்தல் - குறைத்தல்
  ஹஜ்ஜின் செய்முறைகள் 3
  1) இஃப்ராத்: அல்லாஹ{ம்ம லப்பைக் ஹஜ்ஜன் என்று நிய்யத் வைத்து ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது.
  2) கிறான்: அல்லாஹ{ம்ம லப்பைக் உம்ற தன் வ ஹஜ்ஜன் என்று நிய்யத் வைத்து ஹஜ்ஜையும் உம்றாவையும் ஒருசேர நிறை வேற்றுவது. ஹஜ்ஜை முடித்தபிறகே இஹ்ராமை களைதல் வேண்டும். இதில் ஓர் ஆடு குர்பானி கொடுப்பது கடமை.
  3) தமத்துவு: அல்லாஹ{ம்ம உம்றதன் என நிய்யத் வைத்து இஹ்ராம் தரித்து உம்றாவை நிறைவேற்ற வேண்டும். பிறகு இஹ்ராம் களைந்திட வேண்டும். துல்ஹஜ் பிறை 8 ல் அல்லாஹ{ம்ம ஹஜ்ஜன் என நிய்யத் வைத்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இதில் ஓர்ஆட்டை குர்பானி கொடுப்பது கடமை.
  ஹஜ் - உம்றா செய்முறை (சில வரிகளில்)
  1) மீக்காத்தில் இஹ்ராம் கட்டுதல்
  2) தவாகுப், ஸயி செய்தல்(பிறகு தமத்துவு முறையில் செய்பவர் தலைமுடி
  கத்தரித்து இஹ்ராம் களைதல்)
  3) பிறை 8 ல் மினா செல்வது (தமத்துவு படி செய்பவர் புதிய இஹ்ராம் தரிக்க வேண்டும். தங்கியுள்ள இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைக்க வேண்டும்)
  4) பிறை 9 ல் அர குபா செல்லவேண்டும்.
  5) அரகுபாவில் சூரியன் மறையும் வரை தங்கி யிருக்க வேண்டும். பிறகு முஸ்தலி குபாவில் இரவு தங்க வேண்டும்.
  6) பிறை 10 ல் ஸ{ப்ஹ் தொழுத பிறகு மினா செல்ல வேண்டும். அகபா தூணில் கல் எறிதல், குர்பானி கொடுத்தல், தலை முடி மழித்தல், தவா குப் - ஸயி செய்தல்
  7) பிறை 13 வரை மினாவில் இரவு தங்கி தூண்களில் கல் எறிய வேண்டும். எறியும் நேரம்: நண்பகலுக்குப் பின் தொடங்கி இரவு முழுவதும் எறியலாம். பிறை 12 ல் மஃக்ரிப் முன்பே அங்கிருந்து வெளியேறினால் அந்த இரவு மினா தங்குவது கடமை இல்லை.
  8) இறுதியில் பயணத் தவா குப் செய்தல்

  ஹஜ் - உம்றாவில் ஓத வேண்டியவை
  பயணத்தின் துஆ
  உச்சரிப்பு: அல்லாஹ{அக்பர், அல்லாஹ{ அக்பர்,அல்லாஹ{ அக்பர், ஸ{ப்ஹானல்லதி ஸக்கர லனா ஹாதா வ மா குன்னா லஹ{ முக்ரினீன், வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன், அல்லாஹ{ம்ம இன்னா நஸ் அலுக குபீ ஸ குபரினா ஹாதல் பிர்ர வத் தக்வா வ மினல் அமலி மா தர்ழா, அல்லா ஹ{ம்ம ஹவ்வின் அலைனா ஸகுபரனா வத்வி அன்னா புஅதஹ். அல்லாஹ{ம்ம அன்தஸ் ஸாஹிபு குபிஸ் ஸகுபரி வல் கலீகுபது குபில் அஹ்ல், அல்லாஹ{ம்ம இன்னீ அஊூதுபிக மின் வஅஃதாயிஸ் ஸ குபரி வ கஆபதில் மன்ழரி வ ஸ_யில் முன்கலபி குபில் மாலி வல் அஹ்ல்
  பொருள்: அல்லாஹ் பெரியவன் (3முறை) இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்த (இறை)வன் தூயவன்! உண்மையில் இதை வசப்படுத்தும் ஆற்றலை நாம் பெற்றிருக்கவில்லை! திண்ணமாக நாம் நம் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல உள்ளோம்! யா அல்லாஹ்! இந்தப் பயணத்தில் நன்மையையும் பயபக்தியையும் நாங்கள் உன்னிடம் கோருகிறோம். நீ உவந்து கொள்கிற அமல்கள் செய்யும் பாக்கியத்தைக் கேட்கிறோம். யா அல்லாஹ்! இந்தப் பயணத்தை எங்களுக்கு நீ இலகுவாக்குவாயாக! இதன் தொலைவையும் எங்களுக்கு நீ சுருட்டித் தருவாயாக! யா அல்லாஹ்! நீயே பயணத்தின் தோழன்., எங்கள் குடும்பத்தில் பிரதிநிதி! யா அல்லாஹ்! பயணத்தின் சிரமம், பதற்றமான தோற்றம், பொருளிலும் குடும்பத்திலும் நட்டத்தோடு திரும்பி வருதல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!
  தல்பியா
  உச்சரிப்பு: லப்பை(க்)க (அ)ல்லாஹ{ம்ம லப்பைக், லப்பை(க்)க லாஷரீ(க்)க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வன் நிஃமத்த ல(க்)க வல் முல்க், லாஷரீக்க லக்,,
  பொருள்: இதோ! வந்து விட்டேன். இறைவனே! இதோ! ஆஜராகிவிட்டேன். உனக்கு இணை துணை யாருமில்லை. திண்ணமாக அனைத்துப் புகழும் உனக்குரியதே. ஆட்சியதிகாரமும் உனக்கு உரியதே. மேலும் உனக்கு யாதொரு இணையுமில்லை.)
  அல் மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனிதமிகு பள்ளி வாசலில் நுழையும் போது ஓதும் துஆ: (பொதுவாக எந்தப் பள்ளி வாசலில் நுழையும்போதும் ஓதவேண்டியது இதுவே!)
  உச்சரிப்பு: பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸ_லில்லாஹி அவூது பில்லாஹில் அழீம், வபி வஜ்ஹிஹில் கரீம், வ ஸ{ல்தானி ஹில் கதீம், மினஷ் ஷைத் தானிர் ரஜீம், அல்லாஹ{ம் மகுப்தஹ்லீ அப் வாப ரஹ்மதிக்
  பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறையருளும் சாந்தியும் இறைத்தூதர் மீது உண்டாவதாக! மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டும் அவனது திருமுகத்தைக் கொண்டும் அவனது நிலையான மேலாதிக் கத்தைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத் தானை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ்! உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்து விடுவாயாக!
  தவாப் தொடங்க ஓதும் துஆ
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம ஈமான (ன்) ம் பிக வ தஸ்தீக (ன்) ம் பி கிதாபிக வ வகுபாஅ (ன்ம்) பி அஹ்திக வத்திபாஅ (ன்)ல்லி சுன்ன(த்)தி நபிய்யி(க்)க முஹம் மதின் ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்
  பொருள்: யா அல்லாஹ்! உன்மீது ஈமான் கொண்டவனாகவும் உன் வேதத்தை உண்மையென ஏற்றுக்கொண்டவனாகவும் உன்னிடம் முன்னர் செய்த உடன்படிக் கையை நிறைவேற்றியவனாகவும் உன் திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றியவனாகவும் (தவாபை தொடங்கு கிறேன்)
  தவாபில் (ஹஜருல் அஸ்வத் வரும்போது ஓதும்) துஆ
  உச்சரிப்பு: ரப்பனா ஆத்தினா குபித்துன்யா ஹஸனத (ன்வ்) வ குபில் ஆகிரதி ஹஸ னத (ன்வ்) வ கினா அதாபன் நார்
  பொருள்: எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை வழங்குவாயாக! மேலும் நரக வேதனையில் இருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக!
  ஸயி தொடங்கும்பொழுது ஸ குபா குன்றில் சற்று ஏறி நின்று ஓதுவது
  உச்சரிப்பு;: இன்னஸ் ஸ குபா வல் மர்வத மின் ஷஆயிரில்லாஹ், நப்தஉ பிமா பத அல்லாஹ{ பிஹ்
  பொருள்: நிச்சயமாக! ஸபா - மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்.- (இந்த வசனத்தில்) அல்லாஹ் முதலில் கூறியுள்ளதைக் கொண்டே நாமும் (ஸயியை) தொடங்குகிறோம்.
  அத்துடன் ஸ குபாவில் ஓதும் திக்ர்
  உச்சரிப்பு: அல்லாஹ{ அக்பர், அல்லாஹ{ அக்பர், அல்லாஹ{ அக்பர். லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷரீக லஹ{ லஹ{ல் முல்கு வலஹ{ல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹ{வ அலா குல்லி ஷையின் கதீர், லா இலாஹ இல்லலாஹ{ வஹ்தஹ{ லா ஷரீ(க்)க லஹ{ அன்ஜஸ வஃதஹ{ வ நஸர அப்தஹ{ வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்
  (பொருள்:) அல்லாஹ் பெரியவன், (3 தடவை) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கிறான். மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவன் ஒருவனே எல்லாப் பிரிவினரையும் தோற்கடித்தான். (குறிப்பு: இந்த திக்ர் ஓதிய பிறகு துஆ. பிறகு திக்ர். பிறகு துஆ ஓதவும்)
  நபி (ஸல்) அவர்கள் - துஆக்களில் சிறந்தது அரகுபா நாளின் துஆ தான்., நானும் எனக்கு முன் சென்ற அத்தனை நபியமார்களும் கூறிய இந்த திக்ர்தான் மிகவும் சிறந்ததாகும் என்று சொன்னார்கள். அந்த திக்ர் இதுதான்:
  உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹ{ வஹ்தஹ{ லாஷரீ(க்) லஹ{, லஹ{ல் முல்கு வலஹ{ல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹ{வ அலா குல்லி ஷையின் கதீர்
  பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறை வன் இல்லை. அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே. புகழ் அனைத்தும் அவனுக்கே. வாழ்வையும் மரணத்தையும் அவனே கொடுக்கிறான். மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
  ஆதாரப்பூர்வமான துஆக்கள்
  இங்கு குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்களும் கொடுக்கப்படுகின்றன. ஹாஜிகள், எல்லா இடங்களிலும் இவற்றை ஓதியும் பிரார்த் தனை செய்யலாம்!
  உச்சரிப்பு: ஸ{ப்ஹானல்லாஹி வல்ஹம்து லில் லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹ{ வல்லாஹ{ அக்பர்
  பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.
  உச்சரிப்பு : ஸ{ப்ஹானல்லாஹி வ பிஹம் திஹி ஸ{ப்ஹானல்லா ஹில் அழீம்
  பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.
  உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹ{ வலா நஅ;புது இல்லா இய்யாஹ். லஹ{ன் நிஅ;மது வலஹ{ல் குபழ்லு வலஹ{ஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல் லாஹ{ முக்லிஸீன லஹ{த் தீன வ லவ் கரிஹல் கா குபிரூன்
  பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை.அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடை கள் தந்தவன் அவனே. கிருபையும் அவ னுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.
  உச்சரிப்பு: லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்
  பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.
  உச்சரிப்பு: ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்
  பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப்பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லா வற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங் கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணைமிக்க வனும் ஆவாய்!
  உச்சரிப்பு: ரப்பனா லா துணுஸிஃக் குலூ பனா பஅத இத் ஹதை(த்)தனா வ ஹப் லனா மி (ன் ல்) லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்
  பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு எங்களை வழிபிறழச்செய்துவிடாதே! மேலும் உன்னரு ளில் இருந்து எங்களுக்கு கொடை வழங்கு வாயாக!
  நிச்சயமாக நீயே உண்மையில் தாராள மாக வழங்குபவனாக இருக்கிறாய்!
  உச்சரிப்பு: ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ
  பொருள்: என் இரட்சகனே! உன்னிடம் இருந்து எனக்கு தூய்மையான சந்ததிகளை வழங்குவாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கிறாய்!
  உச்சரிப்பு: ரப்பனா ழலம்னா அன்குபுஸனா வ இன் (ல்) லம் தஃக்குபிர் லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்
  பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் இழைத்துக் கொண் டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிட்டால் நிச்சய மாக நாங்கள் நஷ்டத்திற்குரியவர்களாகி விடுவோம்!
  உச்சரிப்பு: ரப்பனஸ்ரிகுப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா
  பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றிடு. நிச்சயமாக அதன் வேதனை ஓயாது தொல்லை தரக் கூடியது!
  உச்சரிப்பு: ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஅ;யுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா
  பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம அஸ்லிஹ்லீ தீனி யல்லதி ஹ{வ இஸ்மது அம்ரி வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லத்தீ குபீஹா மஆதீ வ அஸ்லிஹ்
  ஆகிரதியல்லத்தீ குபீஹா மஆதீ வஜ்அலில் ஹயாத்த ஸியாதத(ன்ல்) லீ குபீ குல்லி கைரின் வல் மௌத்த ராஹத(ன்ல்) லீ மின் குல்லி ஷர்
  பொருள்: எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்னுடைய தீனை எனக்கு சீர்படுத்து வாயாக! எனது வாழ்வு எதில் இருக்கிறதோ அத்தகைய எனது உலகத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! எங்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதோ அந்த எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! ஒவ் வொரு நன்மையையும் செய்வதற்கு (எனக்கு சாத்தியமாகும் வகையில்) என் வாழ் நாளை அதிகமாக்குவாயாக! மேலும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் அமைதி அளிக்கக் கூடியதாக மரணத்தை ஆக்குவாயாக!
  உச்சரிப்பு: அஊது பில்லாஹி மின் ஜஹ் தில் பலாஇ வதர்கிஷ் ஷகாஇ வ ஸ_இல் களாயி வஷமாததில் அஅ;தா
  பொருள்: கடுமையான துன்பத்தைவிட்டும் துர்ப்பாக்கியம் அடைவதை விட்டும் விதியின் தீமையை விட்டும் எதிரிகளின் எக்காளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹ{ஸ்னி வமினல் அஜ்ஸி வல் கஸ்லி வ மினல் ஜுப்னி வல் புخக்லி வமினல் மஃஸமி வல் மஃக்ரமி வமின் கஃலபதித் தைனி வ கஹ்ரிர் ரிஜால்
  பொருள்: யா அல்லாஹ்! கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவம், கடன் மற்றும் கடன்களின் பாரம், பிற மனிதர்களின் கொடுமைகள் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அஊதுபிக ல்லாஹ{ம்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுஸாமி வமின் ஸய்யியில் அஸ்காம்
  பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்மஸ்துர் அவ்ராத்தீ வ ஆமின் ரவ்ஆத்தி வஹ்குபள்னீ மின் பைனி யதய்ய வ மின் خகல்குபீ வஅன் யமீனி வஅன் ஷிமாலி வமின் குபௌக்கீ வ அஊது பி அழ்மதி(க்)க மின் அன் உஃக்தால மின் தஹ்த்தீ
  பொருள்: இறைவா என்னுடைய பலவீனங் களை மறைப்பாயாக. என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக. எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந் தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாது காப்பு அளிப்பாயாக.இன்னும் கீழே இருந்து எதிர்பாராத விதமாக கொல்லப்படுவதில் இருந்து-உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம் மஃக்-குபிர் கதீஅதீ வஜஹ்லீ வ இஸ்ராகுபீ குபீP அம்ரீ வமா அன்த அஅ;லமு பிஹி மின்னி அல்லாஹ{ம் மஃக்- குபிர் லீ ஜத்தி வஹஸ்லீ வக(த்)தயீ வஅம்தீ வகுல்லு தாலிக இன்தீ கு
  பொருள்: யா அல்லாஹ்! எனது பாவத்தையும் எனது அறியாமையையும் எனது விஷயத்தில் நான் மேற்கொள்ளும் வரம்பு மீறல்களையும் மற்றும் எந்தப் பிழைகளை என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் விரும்பி நாடி செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! நான் தவறுகலாகஷ் செய்தவற்றையும் வேண்டு மென செய்தவற்றையும் மன்னிப்பாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம் மஃக்- குபிர் லீ மா கத்தம்(த்)து வமா அخக்கர்து வமா அஸ்ரர் (த்)து வமா அஅ;லன்து வமா அன்(த்)த அஅ;லமு பிஹி மின்னீ அன்தல் முகத்திம். வ அன்தல் முஅخக்கிர் வஅன்த அலா குல்லி ஷைஇன் கஸீர்
  பொருள்: நான் முன்னர் செய்த பாவங் களையும் பின்னர் செய்த இரகசியமாய் செய்த- பகிரங்கமாய்ச் செய்த பாவங்களை யும் மேலும் எந்தப் பிழைகளை என்னை விட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருள்களையும் உருவாக்கியவன் நீயே! மேலும் நீP அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாய்த் திகழ்கின்றாய்!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ்அ லு(க்)கஸ் ஸபாத பில் அம்ரி வல் அஜீ ம(த்) த அலர் ருஷ்தி, வஅஸ் அலுகஷ் ஷ{க்ர நிஅ;ம தி(க்)க, வ ஹ{ஸ்ன இபா ததிக், வ அஸ் அலுக கல்பன் ஸலீம (ன்வ்) வ லிஸானன் ஸாதிக(ன்வ்) வ அஸ்அலுக மின் கைரி மா தஅ;லமு அஊது பிக மின்ஷர்ரி மா தஅ;லமு அஸ்தஃகுபிருக மிம்மா தஅ;லமு இன்னக அல்லாமுல் ஃகுயூப்
  பொருள்: இறைவா! ஈமானில் நிலைகுலையாமையையும் நேர்வழியில் உறுதியையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். மேலும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை நல்ல முறையில் வணங்கி வழிபடுவதற்கும் ஆற்றலை உன்னிடம் கேட்கிறேன். மேலும் பழுதற்ற, சிறந்த இதயத்தையும் உண்மை பேசும் நாவையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நீ அறிகிற நன்மைகளை உன்னிடம் கேட்கிறேன். நீ அறிகிற தீமைகளில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ அறிகிற பாவங்களில் இருந்து உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். திண்ணமாக நீ மறைவானவை எல்லாம் நன்கு அறிபவன்!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம ரப்பன் நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹ{ அலைஹி வ ஸல்லம்) இஃக்-குபிர் லீ தன்பீ வ அத்ஹிப் ஃகைல கல்பீ வ அஇத்னீ மின் முளில்லாதில் குபி(த்)தனி மா அப்கைதனி
  பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்களின் இரட்சகனே! எனது பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் என் இதயத்தின் சினத்தை அகற்றுவாயாக! மேலும் நீ என்னை வாழுமாறு விட்டு வைத்திருக்கும் காலத்தில் வழிகேட்டில் ஆழ்த்தக்கூடிய குழப்பங்களை விட்டும் என்னைப் பாது காப்பாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம ரப்பஸ் ஸமா வா(த்)தி வரப்பல் அர்ழி வரப்பல் அர்ஷிழ் அழீம் ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். காலிகல் ஹப்பி வன்நவா முநஸ்ஸிலத் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்ஆன், அஊது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆகிதுன்(ம்)பி நாஸியதிஹ். அன் (த்)தல் அவ்வலு குப லைஸ கப்லக ஷைய், வஅன்தல் ஆخகிறு குப லைஸ பஅதக ஷைய், வ அன்தழ் ழாஹிறு குப லைஸ குபௌகக ஷைய்,வ அன்தல்பாதினு குபலைஸ தூன(க்)கஷைய், இக்ளி அலைய் யத் தைன, வ அஃக்னினி மினல் குபக்ர்
  பொருள்: யா அல்லாஹ்! வானங்கள் - பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதிபதியே! வித்துக் களையும் பேரீச்சங் கொட்டைகளையும் விளைவிப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கி அருளியவனே! அனைத்துப் பொருள்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.அவற்றின் முன் உச்சி ரோமம் உன் பிடியிலேயே உள்ளது! நீயே முதலாமவன்., உனக்கு முன் எதுவுமில்லை! நீயே இறுதியானவன்., அனைத்தும் அழிந்த பிறகு நீ மட்டும் எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன்., உனக்கு அப்பால் எதுவுமே இல்லை! நீயே அந்தரங்கமானவன்., நீ அன்றி எதுவுமில்லை! எனது கடனை அடைத்துவறுமையை அகற்றி என்னை வளமடையச் செய்வாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம அஅ;தி நகுப்ஸீ தக்வாஹா வ ஸக்கிஹா அன்(த்)த خகைரு மன் ஸக்காஹா அன்த்த வலிய்யுஹா வ மௌலாஹா
  பொருள்: யா அல்லாஹ்! எனது மனத் திற்கு அதன் பக்தியை வழங்கி, அதைப் பக்குவப்படுத்துவாயாக! எனது மனத்தை நீயே சிறந்த முறையில் பக்குவப்படுத்தக் கூடியவன்! நீயே அதன் துணைவனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறாய்!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல் கஸ்லி வ அவூது பி(க்)க மனல் ஜுப்னி வல் ஹரிமி வல் புخக்லி வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ர்
  பொருள்: யா அல்லாஹ் திண்ணமாக நான் இயலாமை,சோம்பல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கோழைத்தனம், முதுமையின் தளர்வு, கருமித்தனம் ஆகியவற்றை விட்டும் உன் னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மண்;ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம லக அஸ்லம்த்து வபிக ஆமன்த்து வ அலைக்க தவக்கல்து வ இலைக்க அனப்து வ பிக காஸம்து அஊது பி இஸ்ஸதிக அன்துளில்லனி லா இலாஹ இல்லா அன்த்த, அன்த்தல் ஹய் யுல்லதீ லாயமூத்து, வல்ஜின்னு வல் இன்ஸ{ யமூ(த்)தூன்.
  பொருள்: யா அல்லாஹ்! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்து வாழ் கிறேன். உன் பக்கமே மீண்டேன். மேலும் உனக்காகவே தர்க்கத்தேன். நீ என்னை வழிகேட்டில் ஆழ்த்துவதை விட்டும் உனது கண்ணியத்தின் பொருட்டால் உதவிகோரு கிறேன். உன்னைத் தவிர வேறு இறை வன் இல்லை. என்றைக்கும் மரணமாகாமல் நித்திய ஜீவனாய் இருப்பவன் நீயே!- ஜின் னுகள், மனிதர்கள் அனைவரும் மரணம் அடைந்துவிடுவர்!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஊது பிக மின் இல்மி(ன்)ல்லா யன் குபஉ, வமின் கல்பி(ன்)லா யஃக்ஷஉ, வமின் ந குப்ஸி (ன்)ல்லா தஷ்பஉ வமின் தஅ;வத்தி (ன்) ல்லா யுஸ்தஜாபு லஹா
  பொருள்: யா அல்லாஹ்! பயனளிக்காத கல்வி, (உனக்கு)அஞ்சாத இதயம், நிறைவு கொள்ளாதமனம் பதிலளிக்கப்படாத பிரார்த் தனை ஆகியவற்றில் இருந்து உன்னிடம் பாதுபாப்புத் தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம அல்ஹிம்னீ ருஷ்தீ வ அஇத்னீ மின்ஷர்ரி ந குப்ஸி
  பொருள்: யா அல்லாஹ்! நேர்வழி நடக்க வேண்டுமெனம் உள்ளுணர்வை எனக்கு ஏற்படுத்துவாயாக! எனது மனத்தின் தீமை யில் இருந்து எனக்குப் பாதுகாப்பு அளிப் பாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ் அலுக்கல் ஹ{தா வத் துக்கா வல் அ குபா குப வல்ஃகினா
  பொருள்: யா அல்லாஹ்! வழிகாட்டல், இறையச்சம்,கற்பு மற்றும் செல்வச் செழிப்பு ஆகியவற்றை உன்னிடம் யாசிக்கிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ் அலு(க்)கல் ஹ{தா வஸ் ஸதாத்
  பொருள்: இறைவா! வழிகாட்டுதலையும் (பிரச்னைகளில்) நேர்மையான முடிவுகளையும் உன்னிடம் கேட்கிறேன்)
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்மஃ குபிர்லீ வர்ஹம் னீ வ ஆ குபினி வர்ஸ{க்னீ
  பொருள்: இறைவா! என்னை மன்னித்து எனக்கு அருள் புரிவாயாக! மேலும் எனக்கு ஆரோக்கியமும் வாழ்வாதாரங்களும் வழங்குவாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ்அ லு(க்)க மினல் خகைரி குல்லிஹி ஃஆஜி லிஹி வ ஆஜிலிஹி மா அலிம்து மின்ஹ{ வமா லம் அஃலம், வ அஊது பிக மினஷ் ஷர்ரி குல்லிஹி ஃஆஜிலிஹி வஆஜிலிஹி மா அலிம்து மின்ஹ{ வமாலம் அஅ;லம். அல்லாஹ{ம்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் خகைரி மாஸஅலக மின்ஹ{ அப்து(க்)க வ நபிய்யு(க்)க முஹம்மதுன் ஸல்லல் லாஹ{ அலைஹி வ ஸல்லம். வ அஊது பி(க்)க மினஷ்ஷர்ரி மஸ்தஆத மின்ஹ{ அப்துக வ நபிய்யு(க்) முஹம்மதுன் ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம்.
  பொருள்: யா அல்லாஹ்! உடனடியாக ஏற் படக் கூடிய - தாமதமாக ஏற்படக்கூடிய மற்றும் நான் அறிந்துள்ள, அறியாதிருக்கிற அனைத்து நன்மைகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உடனடியாக ஏற்படக் கூடிய தாமதமாக எற்படக் கூடிய, நான் அறிந்துள்ள, அறியாதிருக்கிற அனைத்து தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யா அல்லாஹ்! உன் அடியாரும் நபியுமாகிய முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னிடம் வேண்டிய நன்மைகள் அனைத் தையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன் அடியாரும் நபிய்யுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ் அலு(க்)க ஜன்னத்த வமா கற்றப இலை ஹா மின் கௌலின் வஅமலின்(வ்)வ அஊது பிக மினன் நாரி வமா கற்றப இலைஹா மின் கௌலின்(வ்) வஅமல். வ அஸ்அலுக அன் தஜ்அல குல்ல களாயின் களைதஹ{ லீ خகைரா
  பொருள்: யா அல்லாஹ்! சுவனத்தையும் அதன் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தும் சொல் - செயல்;களையும் உன்னிடம் நான் கோருகிறேன். மேலும் நரகத்தையும் அதன் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சொல் - செயல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் என் விஷயத்தில் நீ தீர்மானம் செய்துள்ள தீர்ப்புகள் அனைத்தையும் நன்மையளிக்கும் வகையில் அமைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸ்லி வல் ஹரிமி வல் மஅ;ஸமி வல் மஃக்ரமி வமின் குபித்னதில் கப்றி வ அதாபில் கப்றிவ குபித்னதிந் நாரி வமின் ஷர்ரி குபித்னதில் ஃகினா வஅஊது பிக்க மின் குபித்னதில் குபக்ரி வஅஊது பி(க்)க மின் குபித்னதில்மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹ{ம்ம மஃக்ஸில் அன்னீ கத்தா யாய பிமாயிஸ் ஸல்ஜிவல் பரதி, வ நக்கி கல்பீ மினல் கதாயா, கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மனத் தனஸ், வ பாயித் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்
  பொருள்: யா அல்லாஹ்! சோம்பல், முதுமையின் தளர்வு, பாவம், கடன், மண் ணறையின் குழப்பம், அதன் வேதனை, நரகத்தின் துன்பம், அதன் வேதனை மற்றும் செல்வச்செழிப்பின் குழப்;பத்தினால் ஏற்படும் தீமை மற்றும் வறுமையினால் ஏற்படும் தீமை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வறுமையினால் ஏற்படும் துன்பத்தில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யா அல்லாஹ்! என் பாவங்களைப் பனித்துளி மற்றும் பனிக்கட்டியின் நீர் கொண்டு கழுவுயாயாக! வெள்ளாடையை அழுக்கில் இருந்து தூய்மைப்படுத்துவது போன்று பாவங்களிலிருந்து என் உள்ளத் தைத் தூய்மையாக்குவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் தூரத்தை ஏற்படுத்துவாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ் அலுக்க ஹ{ப்பக்க வ ஹ{ப்ப ம(ன்)ய் யுஹிப்பு(க்)க வல் அமலல்லதீ யுப்லிகுனீ ஹ{ப்பக், அல்லாஹ{ம் மஜ்அல் ஹ{ப்பக்க அஹப்ப இலய்ய மின் நஃப்ஸீ வ அஹ்லீ வ மின் மாயில் பாரித்
  பொருள்: யா அல்லாஹ்! உன் நேசத் தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் மற்றும் உனது நேசத்தை அடையும் வகையில் எனக்கு உதவும் செயல் களையும் உன்னிடம் கோருகிறேன். யா அல்லாஹ்! என்னை விடவும் என் குடும்பத்தினரை விடவும் குளிர்ந்த பானத்தை விடவும் அதிகமாக நான் உன்னை நேசிக்கும் வகையில் என்னுள் உன் நேசத்தை ஏற்படுத்து வாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅ;மதிக்க வ தஹவ்வுலி ஆகபியதிக், வ குபுஜ்அத்தி நிக்மதி(க்)க வ ஜமீஇ ஸகதிக்
  பொருள்: யா அல்லாஹ்! உன் அருட் கொடை அகன்று விடுவதை விட்டும் நீ கொடுத்த ஆரோக்கியம் மாறிவிடுவதை விட்டும் உன் தண்டனையும் அனைத்துக் கோபங்களும் திடீரென வருவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ அஸ் அலுக்க மூஜிபா(த்)தி ரஹ்மதிக்க வ அஸா இம மஃக்-குபிரதிக வல் கனீமத்த மின் குல்லி பிர்ரின் வஸ் ஸலாமத்த மின் குல்லி இஸ்மின்(வ்)வல் குபௌஸ பில் ஜன்னதி வந் நஜாத மினந் நார்
  பொருள்: யா அல்லாஹ்! உனது அருளுக்கும் உனது மன்னிப்புக்கும் காரணமாய் உள்ள அனைத்தையும் உன்னிடம் நான் கோருகிறேன். எல்லா நன்மைகளையும் அரிதாக் கருதி செயல்படுத்தும் பாக்கியத்தையும் அனைத்துப் பாவங்களில் இருந்து ஈடேற்றத்தையும் சுவனப் பேற்றையும் நரகத்திலிருந்து விடுதலையும் உன்னிடம் கோருகிறேன்.
  உச்சரிப்iபு: அல்லாஹ{ம்ம லா ததஃ லீ தன்பன் இல்லா ஃகஃபர்தஹ{ வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹ{ வலா தைனன் இல்லா களைத்தஹ{ வலா ஹாஜத்தன் ஃபீஹா லக்க ரிளன் இல்லா களைத்தஹா யா அர்ஹமர் ராஹிமீன்
  பொருள்: யா அல்லாஹ்! என்னுடைய எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் இருக்காதே! எனது எந்தக் கவலையையும் அகற்றி மகிழ்ச்சி ஏற்படுத்தாமல் விடாதே! எனது எந்தக் கடனையும் அடைக்காது விட்டுவைக்காதே! கருணையாளர்களிலே கருணைமிக்கோனே! உனக்கு திருப்தியாக உள்ள என் எந்தத் தேவையையும் நிறைவேற்றாமல் விடாதே!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுள்மன் கஸீரன் வலா யஃ-ஃபிருத் துனூப இல்லா அன்த்த ஃபக்ஃ-ஃபிர் லீ மஃக்பிரதன் (ம்) மின் இன்திக்க வர்ஹம்னீ இன்னக அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்
  பொருள்: யாஅல்லாஹ்! திண்ணமாக நான் என் ஆன்மாவுக்கு அதிகப்படியாக அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பார் யாருமில்லை. எனவே உன் சார்பாக என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! திண்ணமாக நீ பெரும் மன்னிப்பாளனும் கருணையாளனும் ஆவாய்!
  உச்சரிப்பு: யா முகல்லிபல் குலூபி ஸபித் கல்;பீ அலா தீனிக்
  பொருள்: இதயங்களை புரட்டுபவனே! என் இதயத்தை உன் தீனில் நிலைப்படுத்து வாயாக!
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம ஆத்தினா குபித் துன்யா ஹஸனதன் (வ்)வ குபில் ஆகிரத்தி ஹஸனதன் (வ்)வக்கினா அதாபந் நார்
  பொருள்: யா அல்லாஹ்! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மை வழங்குவாயாக! மேலும் நரகத்தின் வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக!
  தூங்கச் செல்லும்போது ஓதுவது
  உச்சரிப்பு: பிஸ்மிகல்லாஹ{ம்மஅமூத்துவ அஹ்யா
  பொருள்: யாஅல்லாஹ்! உனது பெயர் கொண்டே நான் தூக்கத்திற்குச் செல்கிறேன்., விழித்தெழுகிறேன்,,
  காலையில் விழித்ததும் ஓதும் துஆ
  உச்சரிப்பு: அல்லாஹ{ம்ம பிக அஸ்பஹ்னா வ பிக அம்ஸைனா வ பிக நஹ்யா வ பிக நமூது வ இலைக்கன் நுஷ_ர்
  பொருள்: யா அல்லாஹ்! உன் பெயரைக் கொண்டே காலைப்பொழுதில் நாங்கள் ஆகிவிட்டோம்.,உன் பெயரைக் கொண்டே மாலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே உயிர் வாழ்கிறோம்., உன் பெயரைக் கொண்டே மரணமாவோம். மேலும் எழுப்பப்பட்டு வருவதும் உன் பக்கமே!
  ஊர் திரும்பும்போது ஓதும் துஆ
  உச்சரிப்பு: ஆயிபூன தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்
  பொருள்: நாங்கள் திரும்பிவருகிறோம், பாவமன்னிப்புக் கோருகிறோம், மேலும் எங்கள் இரட்சகனை வணங்கக் கூடியவர்களாகவும் அவனைப் புகழக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்,,