2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் வெற்றிபெற்றோரின் விபரங்கள் அக்டோபர் 9ம் திகதிக்கு பின்னால் அறிவிக்கப்படும்.     நூலகம் என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நூலையும் வினாப்பத்திரத்தையும் தேடிப்பெற்றுகொள்ளலாம்.     .2015ம் ஆண்டிற்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான வினாப்பத்திரத்தையும் புத்தகத்தையும் டவுன்லோட் செய்து போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வெல்லுங்கள். நீங்கள் விரும்பிய இடத்திலிருந்து பங்குபற்றலாம். .     அல்அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.    
 • பார்வையாளர் எண்ணிக்கை
  no registration needed counter
  Flag Counter
   


  பசித்திருந்தோமா? அல்லது பயிற்சி எடுத்தோமா ?

  பசித்திருந்தோமா? அல்லது பயிற்சி எடுத்தோமா ?
  ________________________________________
  இறைவனின் மாபெரும் கருணையினால் மிகப் பெரும் அருட்கொடைகளைச் சுமந்து வந்த மாதமாகிய ரமளான் மாதத்தைக் கடந்தவர்களாக, அந்த மாதத்தில் இறைவன் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு எதைக் கடமையாக்கி வைத்தானோ, அந்த 30 நோன்புகளையம் பூர்த்தி செய்து விட்டவர்களாக, ஷவ்வால் மாதத்தை அடைந்திருக்கின்றோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
  இறைவன் அந்த ரமளான் மாதத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,
  ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டுள்ளது போல் உங்கள் மீதும் (அது) விதியாக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோராய்த் திகழக் கூடும். (2:183).
  மேலே உள்ள வசனத்தின்படி, ரமளான் நம் மீது கடமையாக்கப்பட்டதன் நோக்கமே நாம் இறையச்சமுடையவர்களாக ஆக வேண்டும் என்பதற்காகத் தான் என்றிருக்கும் பொழுது, அத்தகைய இறையச்சத்தை கடந்த ரமளான் மூலம் நாம் பெற்றுக் கொண்டோமா? என்பதை நாம் கண்டிப்பாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.
  சகோதரர்களே! ரமளானில் இரவில் குறைவாகத் தூங்கி நிறைவான நல்லருளைத் தேடினீர்கள். எவ்வாரெனில், இதற்கு முன்னிருந்த காலங்களில் நம்மால் அதிகாலைத் தொழுகைக்கு எழ முடியாமல் இருந்தது. அதற்குப் பல காரணங்களைக் கூறி வந்தததை நாம் அறிவோம். ஆனால் இந்த ரமளானில் என்ன அதிசயம்! ரமளானுக்கு முன்பு நமக்கு என்ன பணிகள் இருந்ததோ, அதே போலத் தான் ரமளானிலும் பணிகள் இருந்தன. ஆனால் ரமளானில், ஸஹர் செய்வதற்காக வழக்கத்திற்கு மாறாக நாம் படுக்கையை விட்டு, அதிகாலைத் தொழுகைக்கு முன்னதாகவே எழுந்தோம்.
  ரமளானில் நீங்கள் யாருடனும் தர்க்கம் செய்ய வேண்டாம். பிறருடன் சண்டைக்குச் செல்ல வேண்டாம். பொய், புறம், கோள், திருடு, ஆபாசம், மற்றும் கெட்ட நடத்தைகைளிலிருந்துது தவிர்ந்து கொள்ளுங்கள். (இது மற்ற காலங்களிலும் தவிர்ந்து இருக்க வேண்டியவையே) என்று இறைவன் இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு, ஒவ்வொரு செயலையும் நாம் நுணுக்கமாக இறைவனுக்குப் பிடித்த வகையில் கழிக்க மிகவும் சிரமமெடுத்துக் கொண்டோம். மற்ற காலங்களில் குர்ஆனைக் கiயில் பிடிக்காத நாம் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்துது விட வேண்டும் என்ற வைராக்கியத்தை மேற்கொண்டு, அதை முடித்தோம்.
  இத்தனையையும் நாம் பசித்திருப்பதன் மூலம் தான் செய்ய முடிந்தது என்பதை விட இறைவனுக்கு நாம் நன்றியுடையவர்களாக, அவன் இட்ட கட்டளையை சிரமேற் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்ற ஈமானிய வேகம், இறையச்சம் தான் இத்தகைய நல்லமல்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டியது என்று கூறலாம்.
  இன்று நம்மை விட்டு அந்தப் புனிதமிகு ரமளான் மாதம் சென்று விட்டது. அந்த ரமளான் மாதத்தில் எதை எதை இறைவன் கட்டளையிட்டானோ அதனை நாம் சிரமமெடுத்து நிறைவேற்றினோம், எதை இறைவன் தவிர்ந்து கொள்ளும்படிக் கட்டளையிட்டானோ அதிலிருந்து நாம் தவிர்ந்து கொண்டோம். இத்தகைய நற்செயல்கள் ரமளான் மாதத்திற்கு மட்டும் உரித்தானதா? அல்லது மொத்த நம் வாழ்க்கைக்கும் ஏற்றுச் செயல்படுவதற்காக இறைவன் அளித்த பயிற்சியா? என்பதை சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் சகோதரர்களே! மேலே உள்ள வசனத்தில் நாம் பார்த்தோம். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் நாம் இறையச்சமுடையவர்களாக ஆக வேண்டும் என்பதே அன்றி நாம் பசித்திருக்க வேண்டும் என்பதல்ல.
  ரமளான் மாதத்தில் எவர் தீய செயல்களில் இருந்து விலகி இருக்கவில்லையோ அவர், பசித்திருப்பதனால் எந்தவித பலனையும் அடைந்து விட மாட்டார் என்ற நபி மொழியானது, ரமளான் மாதத்தில் மட்டும் தீய செயல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, அத்தகைய தீய செயல்களில் இருந்து விலகி இருந்து கொள்வதற்கான பயிற்சியை ஏற்படுத்தக் கூடிய மாதமாக இந்த ரமளான் மாதத்தை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் நாம் எண்ணங் கொள்ள வேண்டும். ஏனெனில் எவற்றையெல்லாம் தீமைகள் என்று இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நமக்குச் சுட்டிக் காட்டித் தந்துள்ளார்களோ, அவை ரமளானில் மட்டுமல்ல, ரமளான் அல்லாத காலங்களிலும் அவை தீமைகள் தான். அவை அத்தனையும் நம் மொத்த வாழ்விலும் தவிர்ந்து வாழக் கூடியவைகள் தான்.
  மேலும், இந்த ரமளான் மாதத்தில் பள்ளிகள் அனைத்தும் நிரம்பி வழிந்ததை நாம் அறிவோம். இந்த ஈமானிய வேகம் ரமளான் மாதத்திற்கு மட்டும் உரித்தானதா? அல்லது வயது வந்த ஆண் பெண் அனைவர் மீதும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கடமையானதா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரமளான் முடிந்ததும் பள்ளிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடப்பதை நாம் அறிவோம். ரமளான் மாதத்தில் மட்டும் தொழுகை கடமையானதல்லவே! மாறாக வாழ்நாள் முழுவதற்கும் கடமையான ஒன்றல்லவா? நாளை மறுமையிலும் சரி, மண்ணறையில் வைக்கப்பட்டவுடன் கேட்கப்படக் கூடிய முதல் கேள்வி தொழுகையைப் பற்றித் தான் என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். எனவே, மேலே நாம் கூறிய தீய செயல்களில் இருந்து இனியும் தவிர்ந்து கொள்ளாமலும், வணக்க வழிபாடுகளில் அசட்டைப் போக்குடனும் இனியும் நீங்கள் இருப்பீர்கள் என்றால், நீங்கள் கடந்த ரமளானில் பசித்திருந்தீர்களே ஒழிய, இறையச்சத்தைப் பெற்றுக் கொள்ளவேயில்லை என்பதாகி விடும் சகோதரர்களே!
  எனவே, கடந்த ரமளானில் எத்தகைய ஈமானிய வேகத்தைப் பெற்றுக் கொண்டீர்களோ, அத்தகைய ஈமானிய வேகத்தை ரமளான் அல்லாத காலங்களிலும் தொடர்ச்சியாக நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் மட்டுமே, இறைவன் கூறியபடி இறையச்சமுடையோராக நாம் ஆக முடியும். அதுவல்லாமல், நாம் பொடுபோக்குத்தனமாக இருந்தோமென்றால், ரமளான் மாதம் நம்மை எந்த விதத்திலும் மாற்றியமைக்கவில்லை என்று தான் அர்த்தமாகின்றது.
  இறைவன் நம் அனைவரையும் கடந்த ரமளான் மாதத்தின் மூலம் படிப்பினை பெற்றவர்களாக ஆக்கி அருள்வானாக! ஆமீன்.